“சாரி மஞ்சு, நான் அப்போ உன் கிட்ட அப்படி பேசி இருக்க கூடாது... ரொம்ப ரூடா பதில் சொல்லிட்டேன்...”
ஆம் என்று ஆமோதிக்கும் விதத்தில் மஞ்சு அமைதியாக இருந்தாள்...
“நான் செய்த தப்புக்கு என்ன செஞ்சு சரி செய்றது???”
“உண்மையை சொல்லுங்க போதும்... உங்களுக்கு ட்ரிங்க்ஸ் ஹாபிட் இருக்கா?”
“எதுக்கு இதையே இத்தனை தடவை கேட்குற???”
“எனக்கு அது சுத்தமா பிடிக்காது... அதான்... நான் இப்படி சொன்னேன்னு பொய் சொல்லாம உண்மையை சொல்லுங்க...”
“ஹாபிட்ன்னு கிடையாது... எப்போவாவது டேஸ்ட் செய்திருக்கேன்...”
மஞ்சு முறைக்கவும்,
“ஹேய், முறைக்காதே... எனக்கு பழக்கம்னு இல்லை...” என்று தெளிவுப் படுத்தினான் மனோஜ்.
“தப்பிச்சீங்க... இல்லைனா நீங்க அவ்வளவு தான்... இதை அந்த கௌரவ் கிட்ட நேராவே சொல்லி இருக்கலாம்... எனக்கு அந்த ஆளை பிடிக்கவே இல்லை...”
மஞ்சு கடைசி வாக்கியத்தை பல்லைக் கடித்துக் கொண்டு கோபமாக சொல்லவும், மனோஜ் மனைவியை யோசனையுடன் பார்த்து, .
“எனக்கும் கௌரவை பிடிக்கலை... அவன் முழியே சரி இல்லை... இடியட்...” என்றான்.
மனோஜ் அதை சொன்ன விதம் மஞ்சுவை திகைக்க வைத்தது... இவன் ஏன் இவ்வளவு கோபப்படுகிறான்??? கௌரவ் வீட்டில் அவனுடன் நன்றாக தானே பேசிக் கொண்டிருந்தான்...