“நீங்க ஆல்கஹால் குடிப்பீங்களா மனோஜ்?” என்று அவள் நேரடியாக கேட்கவும், மனோஜ் ஆம் என்றும் சொல்லாமல், மறுக்கவும் செய்யாமல் அமைதியாக மீண்டும் புன்னகைத்தான்...
மஞ்சுவின் பி.பி எகிறிக் குதித்தது...!!!
கௌரவ் வேறு இப்போது இன்னும் சத்தமாக சிரித்தான்... கூடவே,
“மஞ்சு, ப்ளீஸ் டோன்ட் புட் யுவர் ஹஸ்பன்ட் இன் அ ஸ்பாட்...! இட்ஸ் ஓகே மனோஜ், பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்...” என்றான்.
மனோஜும் பெரிய ஜோக்கை கேட்டவன் போல சிரிக்கவும், மஞ்சுவிற்கு கோபமாக வந்தது...
அவளைப் பொறுத்த வரை மது அருந்துதல் ஏற்றுக் கொள்ளக் கூடிய பழக்கம் இல்லை... மனோஜ் மது அருந்தியோ அதைப் பற்றி பேசியோ அவள் கேட்டதுக் கூட இல்லை... ஆனால் மனோஜ் இங்கே நடந்துக் கொள்ளும் விதம் அவளுக்கு கேள்விகளை கொடுத்தது...
ஆனாலும் பல்லைக் கடித்துக் கொண்டு அமைதியாக இருந்தாள்...
“தேங்க்ஸ் கௌரவ்... நாங்க கிளம்புறோம்... வீ வில் மீட் சம் அதர் டைம்...” என மனோஜே கௌரவிடம் விடைப் பெற்றான்...
மஞ்சு பெயருக்கு சிரித்து வைத்தாள்...
மற்ற பெண்களிடம் விடைப் பெற மஞ்சு செல்ல, கௌரவ் மனோஜின் அருகே வந்தான்...
“யூ ஆர் அ லக்கி பெர்சன் மனோஜ்... மஞ்சு போல ஒரு ட்ரெடிஷனல் பியூட்டி மனைவியா கிடைக்குறது அபூர்வம்... ஐ ஆம் ஷுயர் யூ மிஸ் ஹேர் அ லாட்...”
மனோஜிடம் பேசினாலும் கௌரவின் கண்கள் மஞ்சுவை தொடரவும், மனோஜ் முதல் முறையாக கௌரவ்வை சந்தேகத்துடன் பார்த்தான்...