மறைத்து வைத்திருந்த கோபம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படத் தொடங்கியது.
“உங்களுக்கு வேணும்னா நான் பேசனும், உங்களுக்கு வேண்டாம்னா நான் பேசக் கூடாது, அப்படி தானே? எனக்கு இப்போ உங்க கூட பேச இஷ்டம் இல்லை. உங்களுக்கு வேலையை தாண்டி எது மேலேயும் இன்ட்ரஸ்ட் கிடையாது. போய் உங்க புது வேலையையே கட்டி கிட்டு அழுங்க. அது மட்டும் தான் உங்களுக்கு முக்கியம்!!!”
மஞ்சு மூச்சு விடாது பேசி விட்டு மனோஜின் கையை உதறி விட்டு நடந்தாள்.
மனோஜ் எப்படியாவது மஞ்சுவை சமாதானம் செய்வது என்று முடிவு செய்திருந்ததால், அவனும் பதிலுக்கு பதிலாக உர்ர் என்று கோபம் கொள்ளாது, பொறுமையாகவே இருந்தான். அதனால் அமைதியான குரலில்,
“நான் இன்னைக்கு அமுதாவையும், அவ ஹஸ்பன்டையும் மீட் செய்தேன்...” என்றான்.
மனோஜ் எதிர்பார்த்ததுப் போலவே மஞ்சு நின்று திரும்பிப் பார்த்தாள்.
“அமுதா சிகாகோ வந்திருக்கது கூட உனக்கு தெரியலை எனும் போது உங்க நடுவே எவ்வளவு பெரிய விரிசல்ன்னு புரியுது. இதுக்கு நான் தான் காரணகர்தான்னும் என்னால கெஸ் செய்ய முடியுது.”
அவனின் காரண காரியங்களை பற்றி அலசாமல்,
“அமுதாவை எங்கே பார்த்தீங்க?” என்று கேட்டாள் மஞ்சு!
“நான் வேலைக்கு சேர்ந்திருக்க கம்பெனி கிங் சாஃப்ட். அது அமுதாவோட ஹஸ்பன்ட் சரவணனோட கம்பெனி. அமுதா உன் வழியா எனக்காக ரெகமென்ட் செய்த அதே வேலை தான் எனக்கு கிடைச்சிருக்கு...!!!”
“ஒ!” என்று மட்டும் சொன்னாலும் மஞ்சுவிடம் வந்த ஆச்சர்யமும், அதிர்ச்சியும் மனோஜிற்கு