புரிந்தது.
“வேற பர்சனல் ரீசன்ஸ்க்காக அமுதாவும், சரவணனும் இங்கே வந்திருக்காங்க. நான் அவங்களை ஆஃபீஸ்ல மீட் செய்தேன்.”
மஞ்சு எதுவும் சொல்லாமல் யோசனையுடன் நின்றாள்.
“அமுதா பேசினதை வச்சு பார்த்தா அவளுக்கு உன் மேல தான் கோபம்னு தோணுது. நீ அவக் கிட்ட என்ன சொல்லி வேலையை வேண்டாம்னு சொன்ன pbs?”
“அது இப்போ முக்கியம் இல்லை!” என்று சொல்லி மஞ்சு மீண்டும் திரும்பவும்,
“மஞ்சு... ப்ளீஸ்... நான் தான் சொல்றேனே... பாஸ்ட் ஃபியூ டேஸா நான் நானாகவே இல்லைன்னு... நீ அமுதா கிட்ட அந்த வேலையை கேட்க எவ்வளவு யோசிச்சிருப்பேன்னு எனக்கு தெரியும்... ஆனால், நான் ரெகமென்டேஷன் வேண்டாம்னு சொனனதுக்கு காரணம் என் மேல எனக்கு இருந்த நம்பிக்கை தான்... நீயும் எங்கே என் திறமை மேல சந்தேகப் பட ஆரம்பிச்சிட்டீயோன்னு கோபம் வந்தது...” என அவசரமாக பேசினான் மனோஜ்...
“நான் அப்படி எதுவும் நினைக்கலை... புது வேலை கிடைச்சா உங்களுக்கு வசதியா இருக்கும்னு நினைச்சேன் அவ்வளவு தான்...”
மஞ்சு தணிவாக பேசியது, மனோஜிற்கு நம்பிக்கையை கொடுத்தது!
“அமித் கீழ வேலை செய்றது எனக்கு எப்படி இருந்திருக்கும்ன்னு உனக்கே தெரியும் மஞ்சு... அவன் வேற ஒவ்வொரு டீம் மீட்டிங்லேயும் வேணும்னே எதையாவது சொல்லி என்னை ட்ரிகர் செய்வான். இது போதாதுன்னு ஸ்ரீனி வேற எனக்கு ரோல் மெச்சூரிட்டி இல்லைன்னு அஃபிஷியலா பெரிய ஈமெயில் வேற அனுப்பி வச்சிருந்தான். அந்த பிழைப்பே வேண்டாம்னு வேற வேலை தேடினா, ரெடிமேட் விஸாவோட வான்னு எல்லோரும் துரத்துறாங்க... ரொம்பவும் கஷ்டமா இருந்தது pbs...”
மஞ்சு அவளாகவே மனோஜின் அருகே வந்தாள்...