(Reading time: 15 - 30 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

விட்டு போனை காதில் இருந்து அகற்றிய இந்து, அவளோடு காரில் வந்து இறங்கிய உதவியாளர் நிலாவிடம்,

  

"அதே interior decorators தான். நமக்காக ஒரு ஸ்பெஷலிஸ்டை அனுப்பி இருக்கிறாங்களாம்.. பார்த்துப் பேசிட்டு நான் கிளம்புகிறேன். சாயந்திரம் ஆறு மணிக்கு மேல் எனக்கு போன் போட்டு எல்லா அப்டேட்ஸையும் கொடுங்க சரியா?" என்றாள்!

  

இந்து சொல்வதைக் கேட்டுக் கொண்டே ஆவலுடன் நடந்து கொண்டிருந்த நிலா,

  

"ஓகே மேடம்" என்றாள்.

  

வேகமாக நடந்து ரிசெப்ஷனை அடைந்த கீதா, அங்கிருந்த ரிஷப்ஷனிஸ்டிடம் கேட்டு வீணாவும், கீதாவும், கவியைப் பார்க்க போய் இருப்பதை அறிந்துக் கொண்டாள். அங்கே அமர்ந்திருப்பவர்கள் மேல் பார்வையை செலுத்தியவள் மஞ்சள் நிற டி ஷர்ட் அணிந்து, பழச் சாறைப் பருகியபடி இருந்த இளைஞனை நோக்கி நடந்தாள். நிலாவும் அவளுடன் நடந்தாள்.

  

அமர்ந்திருந்தவனின் அருகே சென்ற இந்து,

  

"ஹலோ, நான் தான் இந்து... சாரி, ரொம்ப நேரமாக வெயிட் பண்றீங்களா? நான் இன்னைக்கு கொஞ்சம் பிஸி... வாங்க என்னோட ஐடியாஸ் சொல்றேன்..." என்று சொல்லிவிட்டு வேகமாக நடந்தாள்.

  

திகைப்புடன் விழித்தப்படி நின்ற 'மஞ்சள் சட்டக்காரனை' சந்தேகத்துடன் பார்த்தாள் நிலா. ஆனால், அவன் இந்துவைப் பின் தொடரவும், அவளும் வேகமாக, இந்துவை தொடர்ந்தாள்.

  

அலுவலகத்தின் கீழ் தளத்தில் இருந்த பெரிய அரங்கத்துள் (auditorium)  நுழைந்தாள் இந்து. மற்ற இருவரும் அவளைப் பின் தொடர்ந்தார்கள். தொடர்ந்த ஆறு ஏழு நிமிடங்கள் இந்து வர இருக்கும் தங்கள் கம்பெனியின் வெள்ளி விழாவிற்கு என்ன விதமான அலங்காரங்கள் செய்ய வேண்டும் என்பதை விவரித்தாள். இந்து சொல்வதை கவனித்தானோ இல்லையோ இந்துவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த 'அவனின்' மேல் நிலாவிற்கு ஏனோ சந்தேகமாக இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.