பெருமைபட்டார். காவேரியின் செயல் தீயாய் ஊரெங்கும் பரவி அது கொம்பனின் காதில் வந்து விழுந்தது. அவனோ அதைக்கேட்டு மென்மையாக புன்னகைத்து
”ஆமா அவள் என்ன சொன்னா கொம்பன் பொண்டாட்டின்னு சொன்னாளா” என ஆர்வமாக கேட்க வந்தவனோ
”ஆமாம் அண்ணா அப்படித்தான் சொன்னாங்க, பிரச்சனையை எவ்ளோ சுலபமா முடிச்சிட்டாங்க தெரியுமா இனிமேல பக்கத்து நிலத்துக்காரனால எந்த பிரச்சனையும் வராது”
”அதை விடு என் பேரை சொன்னாளா”
”ஆமாம் அண்ணா”
”சரி சரி நீ போ போ” என வந்தவனை அனுப்பிவிட்டு சந்தோஷமாக இந்த விசயத்தை கணக்குபிள்ளையிடமும் சண்முகத்திடம் சொன்னான் கொம்பன்.
சண்முகம் போலீஸ் கேஸ் என்றதுமே நடுங்கிப் போனார்
”அய்யோ போலீஸ் தலையிட்டாலே பிரச்சனை முடியாதே, காவேரி ஏன்தான் இப்படி அவசரப்படறாளோ, கொஞ்சம் கூட பொறுமையில்லை அவளுக்கு”
”மாமா எதுக்கு பயப்படறீங்க”
”இல்லை மாப்பிள்ளை பிரச்சனை பண்றவனை போய் போலீஸ்ல பிடிச்சி கொடுத்திருக்காளே நாளைக்கே அவன் ரிலீஸ் ஆகி வந்தா இவள் நிலைமை என்னாகிறது”
”அந்த கவலையே வேணாம் மாமா அவள் யாரு கொம்பன் பொண்டாட்டி எவனாயிருந்தாலும் சரி அவளோட நிழலை கூட தொட முடியாது மாமா”