(Reading time: 26 - 52 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

தொடர்கதை - இன்று நீ நாளை நான் - 10 - சசிரேகா

தோப்புக்கு சென்ற காவேரிக்கு அங்கு புது பிரச்சனை முளைத்தது, இது பல வருடங்களாக இருக்கும் பிரச்சனைதான் இப்போது சண்முகமும் இல்லை, கொம்பனும் இல்லை காவேரிதானே அவள் ஒரு பெண்தானே, இவளால் தாக்குபிடிக்க இயலாது என்ற எண்ணத்தில் பக்கத்து நிலத்துக்காரன் பிரச்சனைக்கு வந்தான்

  

இதைபற்றி ஏற்கனவே சண்முகம் சொன்ன காரணத்தால் பயப்படாமல் எதிர்த்து நின்றாள் காவேரி, அதே நேரம் கொம்பனின் தந்தை மகனை பார்க்கும் ஆசையில் அவ்விடம் வர அங்கு காவேரியிடம் பிரச்சனை செய்பவர்களைக்கண்டதும் கோபத்தில் பொங்கினார். காவேரி தடுத்தும் கேளாமல் அவரே பிரச்சனையை முன்நின்று தீர்த்து வைக்க வந்தார் ஆனால் காவேரியோ

  

”மாமா பொறுமையா இருங்க மாமா இது என்னோட பிரச்சனை நானே இதை சரியாக்கறேன்”

  

”உன்னால முடியாது மருமகளே”

  

”ஏன் மாமா முடியாது நான் பொண்ணுங்கறதாலயா”

  

”அப்படியில்லைம்மா பிரச்சனை செய்றவன் நல்லவன் இல்லை கெட்டவன் அவன்கிட்ட போய் உன்னால எப்படிம்மா”

  

”நான் பார்த்துக்கிறேன் மாமா ஆமா நீங்க என்ன இந்த பக்கம்”

  

”கொம்பனை பார்க்கலாம்னு”

  

”ஏன் நேத்து உங்க வீட்டுக்கு வந்தாரே அப்ப பார்க்கலையா”

  

”பார்த்தேன் வந்ததும் புலம்பினான், அப்பறம் வீட்டு வேலைகளை பத்தி விசாரிச்சி எழுதிக்கிட்டான், சந்தோஷமா வந்தவன் போறப்ப உம்முன்னு கவலையா போனான், எங்களுக்கு மனசே ஆறலை அவன் என்ன கஷ்டப்படறானோ தெரியலை உதவி

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.