யோச்சிச்சிருப்பாங்க அவ்ளோதான், என்னை இதுல இழுக்காத நான் ஒரு குட் பர்சன்” என சொல்ல அவளோ அவனை ஏற இறங்க பார்த்துவிட்டு ஆசிரியர்களிடம் பேசினாள்
”இதப்பாருங்க 2 மாசத்துல உங்களால பாடம் எடுக்க முடியாது ஒத்துக்கறேன் அதுக்காக முக்கியமான கேள்விகளுக்குண்டான பதிலையாவது பாடமா எடுக்கலாமே, அதை விட்டுட்டு பாடம் எடுக்காம மாணவர்களை படிக்க சொல்றது நியாயம் இல்லை, புரியாத பாடத்தை எப்படி மாணவர்கள் படிப்பாங்க அவங்க கஷ்டப்படறாங்க, அவங்களுக்கு விளக்கம் கூட தெரியலை இது தப்பு” என சொல்ல ஆசிரியர்கள் ஒட்டு மொத்தமாக சிலம்புவை பார்த்து முறைக்க அவனோ அரண்டான், அதை வைத்தே அவள் புரிந்துக் கொண்டாள்
”நாளையில இருந்து முக்கியமான கேள்விகளுக்குண்டான பதிலை விளக்கமா பாடம் எடுங்க, அப்பதான் மாணவர்களால புரிஞ்சி படிக்க முடியும், ஒருவேளை உங்களுக்கு நேரம் போதலைன்னா சனி ஞாயிறுகள்ல கூட கல்லூரி நடக்கும், அப்பவும் நேரம் போதலைன்னா கல்லூரி நேரத்தை அதிகப்படுத்தறோம் சரியா, அதை விட்டுட்டு பாடம் எடுக்காம மாணவர்களை மனப்பாடம் செய்ய வைக்காதீங்க சொல்லிட்டேன்” என கண்டிப்புடன் சொல்ல ஆசிரியர்கள் நொந்துப் போனார்கள் ஒரு ஆசிரியர் எழுந்து
”சனி ஞாயிறு கூட காலேஜ் வைச்சா எப்படி எங்களுக்குன்னு குடும்பம் இருக்கு நாங்க எங்க குடும்பத்தோட நேரம் ஒதுக்கனும்லயா”
”வாஸ்தவம்தான் இதுநாள் வரை நீங்க அப்படிதானே இருந்தீங்க, நான் ஒண்ணும் இதை நிரந்தரமா செய்யப் போறதில்லையே, இப்ப வர்ற செமஸ்டர் எக்ஸாம்க்காக மட்டும்தான் இப்படி, எல்லா நாளும் காலேஜ் இருக்கும், எக்ஸாம் முடிஞ்ச பின்னாடி நார்மல் டைம் வந்துடும் அடுத்த செமஸ்டருக்குள்ள நீங்க பாடம் எடுப்பீங்க, இப்ப அவசரம் காரணமா இந்த முடிவு எடுத்திருக்கேன், சனி ஞாயிறு கூட கல்லூரி உண்டு இதைப்பத்தி நானே இன்னிக்கு எல்லா மாணவர்களையும் அசம்பிள் செய்ய வைச்சி சொல்லிடறேன் போதுமா“
என சொல்ல அனைவருமே அலுத்துக் கொண்டார்கள்
”இதுக்கும் மேல உங்களுக்கு நேரம் பத்தலைன்னா கல்லூரி நேரத்தை அதிகப்படுத்தறேன்” என