(Reading time: 27 - 53 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

வந்தாங்க என்ன ஏதுன்னு போய் அவங்ககிட்ட பேசி கூட்டிட்டு வரமுடியுமா அவங்கதான் மன்னிப்பு கேட்பாங்களா”

  

”அதுவும் சரிதான் வேணா இப்படி செய்யலாம்”

  

”எப்படி”

  

”காவேரியை பொருத்தவரைக்கும் எல்லாத்துக்கும் காரணம் கொம்பன்தான்னு நினைக்கறா அதனால ஊர்க்காரங்க முன்னாடி கொம்பன் காவேரிக்கு நடந்த அவமானத்துக்கு கஷ்டத்துக்கு எல்லாம் சேர்த்து மன்னிப்பு கேட்டா காவேரி மனசு மாறும்” என சொல்ல சண்முகத்தின் முகம் பிரகாசமானது, ஆனால் உடனே சூம்பியும் போனது

  

”எதுக்கு முகம் மாறுது என்னாச்சி இந்த யோசனையும் பிடிக்கலையா”

  

”அதுக்கில்லை, மாப்பிள்ளை எப்படி செய்யாத தப்புக்காக ஊர்முன்னாடி மன்னிப்பு கேட்பாரு”

  

”எல்லாம் கேட்பான்”

  

”அதெப்படிப்பா முடியும்“

  

“கொம்பனுக்கு காவேரியை பிடிக்கும் அவளுக்காகவாவது மன்னிப்பு கேட்பான்”

  

”இருந்தாலும்“

  

”இப்ப என்ன உங்க சந்தேகம்? கொம்பன் மன்னிப்பு கேட்பானாதானே இருங்க கேட்டுக்கலாம் வாங்க” என அவரையும் உடன் அழைத்துக் கொண்டு கொம்பனை தேடிச் சென்றான்.

  

கொம்பனோ கிணற்றடியில் அமர்ந்து பலமாக யோசித்துக் கொண்டிருந்தான். அவனிடம் சென்றவர்கள்

  

”என்ன கொம்பா பலத்த யோசனையா என்ன விசயம்”

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.