(Reading time: 27 - 53 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

அன்றைய நாள் முழுவதும் கொம்பன் பலவிதமாக யோசித்தான், சாப்பிடவும் இல்லை உறங்கவும் இல்லை விடிகாலை வரை அவன் உறங்காமல் இருக்க மற்றவர்களும் உறங்கவில்லை, காவேரி கூட தன் அறையில் உறங்காமல் அமைதியாக இருந்தாள் கொம்பன் என்ன செய்வான் என சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

  

சூரியன் மெதுவாக உதித்த நேரம் கொம்பன் ஒரு முடிவுக்கு வந்தான் தன்னையே சமாதானப்படுத்திக் கொண்டவன் சட்டென எழுந்து விரைப்பாக நின்றான் அதைக்கண்ட கணக்குப்பிள்ளையோ

  

”கொம்பா” என மெதுவாக அழைக்க கொம்பனோ

  

”ஊர்க்காரங்களை ஒண்ணு சேர், காவேரியை கூப்பிடு நான் மன்னிப்பு கேட்கறேன், இந்த ஊர்க்காரங்க எல்லாரும் இருக்கனும் ஒருத்தன்கூட தவறக்கூடாது போ“ என கட்டளையிட கணக்குப்பிள்ளை மனமகிழ்ச்சியுடன் களத்தில் இறங்கினான். சண்முகமோ

  

”மாப்பிள்ளை வேணாம் காவேரிக்காக நீங்க இப்ப மன்னிப்பு கேட்டா அது உங்களுக்கு பெருத்த அவமானம் ஆயிடும், நான் காவேரிகிட்ட பேசி பார்க்கிறேன்”

  

”வேணாம் மாமா நான் முடிவு எடுத்துட்டேன், பிரச்சனை எங்க ஆரம்பிச்சதோ அங்கதானே முடிக்கனும், அதைதான் இப்ப நான் செய்யப் போறேன், நான் முன்னாடி போறேன் நீங்க காவேரியை கூட்டிட்டு வாங்க” என சொல்லிவிட்டு கிளம்ப முயல காவேரி வந்து நின்றாள்.

  

அவளை அர்த்தமுடன் ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து செல்ல சண்முகமோ

  

”காவேரி உனக்காக மாப்பிள்ளை எவ்ளோ தூரம் இறங்கி வரார்ன்னு பார்த்தியா இனிமேலயாவது உன் மனசை மாத்திக்கம்மா வா போலாம்” என சொல்லி அவளை அழைத்துக் கொண்டு சென்றார்.

  

கணக்குபிள்ளையும் ஊர் மக்களிடம் விசயத்தை கூறி அவர்களை ஒரு இடத்தில் ஒன்று கூட்டினான். அங்கு கொம்பனும் அவனது தாய் தந்தை சொந்த பந்தங்கள் என அனைவரும்

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.