(Reading time: 38 - 76 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

”சந்தோஷம், மாப்பிள்ளை பெரிய பணக்காரன், எனக்கு 2 பொண்ணுங்க இருக்காங்க ஒருத்தி டாக்டர், இன்னொருத்தி 2 டிகிரி படிச்சிருக்கா, உங்களுக்கு எந்த பொண்ணை பிடிச்சிருக்கோ அவளையே உங்களுக்கு நான் கல்யாணம் பண்ணி வைச்சிடறேன், நாளைக்கே ஏற்பாடு செஞ்சிடறேன் அதுவரைக்கும் நீங்க இங்கதான் தங்கனும்” என விடாப்பிடியாக பேச சரணுக்கு கஷ்டமாகிப் போனது. 

   

தாஸோ தேவாவை பார்க்க அவனோ ஏளனமாக சரணைப் பார்த்துச் சிரிப்பதைக் கண்டு அவனை தனியாக இழுத்துக் கொண்டு வெளியே சென்றான்.

   

”என்னடா” என கேட்க அவன் சைகையில்

   

”எதுக்கு சரணை பார்த்து நீ சிரிக்கற? எதுக்காக இப்படி அவசரமா கல்யாணம் வைக்கனும், முதல்ல நீ கல்யாணம் பண்ணு” என சொல்ல அதற்கு தேவாவோ தாஸிடம்

   

”தாஸ் நான் உன்கிட்ட ஒரு விசயம் சொல்றேன் அதை யார்கிட்டயும் நீ சொல்லாத”

   

“என்ன விசயம்”

   

“அந்த சரண் இருக்கான்ல அவன் பையன் கிடையாது பொண்ணு, சரண்யாதான் சரண் வேஷம் போட்டு இருக்கா” என சொல்ல அவனோ திகைத்து புரியலை என சைகை செய்ய

   

”நான் முதல்ல சரணை ஏர்போர்ட்ல பார்த்தப்ப அவனோட கையை பிடிச்சேன். அப்பவே எனக்கு பொண்ணு கையை பிடிச்ச மாதிரியிருந்திச்சி. அப்புறம் சரண்யாவை கூப்பிட போனப்ப அவளோட கையை பிடிச்சப்ப சரணை பிடிச்சது போலவே இருந்திச்சி. உடனே நான் சென்னையில இருக்கற எனக்கு தெரிஞ்சவங்க கிட்ட விசாரிச்சேன். அவங்க நேத்துதான் எனக்கு தகவல் சொன்னாங்க. அந்த சென்னையில இருக்கற என் அப்பாவோட ப்ரெண்ட்டுக்கு ஒரே பொண்ணுதானாம் அது சரண்யாதானாம்”

   

”அப்ப ஏன் பையனா நடிக்கனும்” என சைகையால் அவன் செய்துக் காட்ட

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.