(Reading time: 38 - 76 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

பார்க்கலாம், உன்னோட சோம்பேறிதனத்துக்கும் சேட்டைக்கும் நாங்க பலியாகனுமா வந்த வாய்ப்பை விட முடியாது, 2 வாரம் என்ன 2 வருஷம்னாலும் நீ அவங்க சொன்னதைச் செய்யனும், உன் வேலைகளை நீ போன்லயே பேசிக்க, இந்த டீலிங் உன்னால கைவிட்டுப் போச்சி அதுக்கப்புறம் இந்த வீட்டுக்குள்ளயே நீ வரக்கூடாது, உன்னால அந்த சரண்யா கஷ்டப்படறத பார்க்க முடியாம இந்த சரண் இப்படி புதுசு புதுசா பிரச்சனை உண்டாக்கறான்” என சொல்ல அவனுக்கு கடுப்பானது

   

”ஆனா அப்பா” 

   

“பேசாத நாளைக்கே கிளம்பு, உன் ஆளுங்களை வைச்சி செங்கல் சிமெண்ட் எல்லாம் கொட்டி பத்திரப்படுத்து நாங்க வந்து பார்க்கறோம்”

   

“அப்பா இது அநியாயம், என் வேலையே அதிகம் உங்க வேலையை நான் செய்யனுமா நீங்களே பார்த்துக்குங்க எனக்கு அந்த சரண் கூட வேலை செய்ய பிடிக்கலை.”

   

“எதுடா அநியாயம், கொழுப்புடா உனக்கு யார் பேச்சையும் நீ கேட்க மாட்டேங்கற, இதப்பாருடா இப்பவும் சொல்றேன் அந்த டீல் ரொம்ப முக்கியம், முதல்ல அவன் தங்கச்சிகிட்ட பேசி புரிய வை”

   

”என்னை உங்களால கட்டாயப்படுத்த முடியாதுப்பா” 

   

“அக்ரிமெண்ட் இருக்கு என் கையில அதுபடி வேலை நடந்தே ஆகனும், இல்லைன்னா என் மானம் காத்துல பறக்கும்” என சொல்ல அவனும் மனதில் எரிச்சலுடன்

   

”என்னை விட உங்களுக்கு டீல்தான் பெரிசா போச்சா” என கேட்க அப்பாவும் சித்தப்பாவும் ஒரே சரியாக ஆம் என தலையாட்டவே கோபமாக தன் அறைக்குச் சென்றான். 

   

10 செட் துணி மற்றும் தேவையான அனைத்து பொருட்கள் எடுத்துக்கொண்டு 2 பெட்டிகளுடன் தந்தை முன் நின்றான்.

   

”நான் கிளம்பறேன்”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.