தாவணியில் இருந்தாள். குளித்து முடித்து ஈர தலையுடன் அவள் அந்த விடியும் விடியாத காலைப்பொழுதில் மங்கிய ஒளியில் பிரகாசமாக தெரிந்தாள். எழுந்து குனிந்து என்று அவள் கோலம் போட தலை முதல் பாதம் வரை பார்த்து ரசித்தான் தேவா.
என்ன ஒரு அழகு, இதுவரை எந்த பெண்ணிலும் பார்த்ததில்லை. சரண்யாவிடமும் கண்டதில்லை என நினைக்கும் போதே அவன் வாங்கிய புடவை அணிந்துக் கொண்டு நின்ற சரண்யாவின் உருவம் கண்களுக்கு முன் விரிய உடனே தலையை உலுக்கி அதை விரட்டி விட்டான்.
வீட்டிலேயே 2 முறைப் பெண்கள் இருந்த போதும் ஏற்கனவே அவர்களை அண்ணன் தம்பிக்கு பேசிவிட்ட காரணத்தால் அவர்களின் மனைவிகளாகவே பார்த்தான். தனக்கென வரும் போதே அவனது அத்தையின் 3வது பெண்தான் முறைப்பெண்ணாக கிடைத்தாள். அவளும் இப்போதுதான் 3ம் வகுப்பு படிக்கிறாள், அதனால் அவளை தன் குழந்தையாகவே பாவித்தான் தேவா. அவள் பிறந்த போதே அவளை ஆஸ்பிட்டலில் தூக்கி வைத்துக் கொண்டவன் தேவாதான். அவளுக்கு தேவையான அனைத்தும் செய்தான் ஆனால் என்னவோ இன்று அவன் வீட்டிலும் அவனுக்கு மதிப்பில்லை, அப்பாவும் அவனை அன்பாக நடத்தவில்லை
வீட்டிற்கு அருகிலேயே ட்ரான்போர்ட், ஒர்க்ஷாப் இருந்த காரணத்தால் பெண் வாசம் அதிகம் அறியவில்லை, எந்நேரமும் அவனைச் சுற்றி ஆண்கள் கூட்டமே இருக்கும், அவர்களுடன் பழகி பழகியே அவனுக்கு பெண்கள் மீது நாட்டமில்லாமல் போனது. பள்ளி, கல்லூரி அனைத்துமே ஆண்கள் மட்டும் படிக்கும் இடமாக இருந்ததால் அவனுக்கு பெரிதாக பெண்கள் மீது விருப்பம் இல்லை, வெளியில், தெருக்களில் கடைகளில் என பார்க்கும் இடத்தில் பெண்களை பார்த்தாலும் ஒதுங்கிவிடுவான், அப்படியே யாராவது அருகில் வந்து பேசினாலும் முகத்தை பார்த்து பேசுவான் தவறி கூட அவனது கண்கள் முகத்தை தாண்டி கழுத்துக்கு கீழே போகாது அந்தளவிற்கு கண்ணியமானவன்.
ஆனால் இன்று அப்படியாப்பட்ட கண்ணியமான தேவாவோ கீர்த்தனாவை இன்ச் பை இன்ச்சாக ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கண்கள் போகாத இடம் இல்லை.