(Reading time: 38 - 76 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

   

”எங்க போற?”

   

“இந்த வீட்ல என்னால இருக்க முடியாது, எப்ப நீங்க என்னை விட அந்த சரண்யாவும் அவனோட அண்ணன் போட்ட டீலிங்தான் பெரிசுன்னீங்களோ அப்ப இந்த வீட்ல நான் ஏன் இருக்கனும். இப்பவும் சொல்றேன் என்னால சரண்யாவை கல்யாணம் பண்ணிக்க முடியாது, நான் கீர்த்தனாவைதான் காதலிக்கிறேன் அவளைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்” என கத்த தாத்தா பாட்டி முதல் அனைவரும் ஹாலுக்கு வந்தார்கள். அதில் சரணும் வந்தான். 

   

தேவாவின் கோபத்தைக்கண்டு திகைத்தவன் என்ன ஏது என விசாரிக்க அவனிடம் வர அவனோ

   

”நீ பேசாத சரியா உன் தங்கச்சியை நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். என்னை கட்டாயப்படுத்தறதுக்காக நீ டீலிங்கையும் அந்த ஹாஸ்டலையும் கையில வைச்சி ஆடறியா இதப்பாரு எனக்கு நீ தேவையில்லை. நீ டீலிங்கை ஓகே சொல்லி அக்ரிமெண்ட்ல கையெழுத்தும் போட்டுட்ட இப்ப நீயே கேன்சல் பண்ற காரணம் என்ன உன் தங்கச்சிக்காகதானே இப்ப சொல்றேன் நான் கிளம்பறேன், இந்த வீட்டை விட்டு நான் போறேன். உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்க நான் உனக்கு கிடைக்கவே மாட்டேன், நீ யாரு என்ன ஏதுன்னு எனக்குத் தெரியும் அது வெளிய சொன்னா உனக்கு ஆபத்து அதனால ஒழுங்கா இருக்கற வழியைப்பாரு” என சொல்ல பாட்டி உடனே

   

”எங்கடா போற”

   

“இங்க இருந்தா எல்லாரும் என்னை கட்டாயப்படுத்தறாங்க பாட்டி, அதான் நான் வெளிய தங்கலாம்னு இருக்கேன். இந்த சரண்யா பிரச்சனை ஓஞ்சாதான் எனக்கு நிம்மதி” என அவன் சரணை பார்த்து பேச அவனுக்கு சந்தேகமும் நடுக்கமும் வர அங்கிருந்து தன் அறைக்குச் சென்றுவிட அப்பாவோ

   

“காலையில போ”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.