(Reading time: 38 - 76 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

   

”அவள் பயந்திருக்கா தேவா அதான் உளறிவைக்கறா, நீ பயப்படாத அவள் என் பொறுப்பு நான் பார்த்துக்கறேன், நீ அமைதியா இரு போனை வை” என சொல்லிவிட்டு போன் கட்டாகவும் தேவாவிற்கு யோசனையாக இருந்தது. தாஸிடம் போனில் பேசியதைச் சொல்ல அவனும் யோசிக்கலானான்.

   

கீர்த்தனாவிடம் பேசியதில் இருந்து அவளின் அழகு முகமும், அவளின் கெஞ்சல் பார்வையுமே தேவாவின் கண்களில் தெரிந்தது. அவளை தனியாக விட்டு வந்தது கூட அவனுக்கு வெறுப்பாக இருந்தது.

   

”சே கீர்த்தனாவை நம்ம வீட்லயே தங்க வைச்சிருக்கலாம், இங்க வீட்டுக்கு வந்தா மட்டும் யார் இருக்கா நமக்கு, இந்த சரண்யாவை பார்த்துக்கிட்டதுக்கு பதிலா அவளை பார்த்திருக்கனும். இந்த சரண்யா இன்னும் என்னென்ன செய்வாளோ தெரியலையே. காதல் அது இதுன்னு வைச்சி டீலிங்கை கேன்சல் பண்ணிடுவாளோ” என சொல்ல தாஸோ தன் தங்கையை நினைத்து தேவாவிடம் 

   

”நாம என்ன அவளை காட்லயா விட்டுட்டு வந்தோம், பெரிய குடும்பத்தில தானே விட்டோம், எல்லாம் அவள் பத்திரமாதான் இருப்பா நாம அந்த சரண் கிட்ட பேசி விரட்டனும்” என சைகை செய்ய அதை உடனே புரிந்துக் கொண்டு அதைப்பற்றி யோசிக்கலானான் தேவா

   

இரவானதும் அமைதியாக வீட்டுக்கு செல்ல அங்கு  பெரிய பிரச்சனையே காத்துக்கொண்டு இருந்தது.

   

”வாடா வா உனக்காகத்தான் நாங்க எல்லாரும் காத்திருக்கோம்” என சித்தப்பா விசுவநாதன் கத்த தேவா அமைதியாக அவரிடம்

   

”என்னாச்சி சித்தப்பா ஏதாவது பிரச்சனையா”

   

”ஆமாம் பிரச்சனைதான், ஏண்டா நான் அப்பவே சொன்னேன்ல, அந்த டீலிங் ரொம்ப 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.