(Reading time: 38 - 76 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

”தெரியலை. ஏதோ வில்லங்கம் இருக்கு, இரு இப்பதானே அவனை மாட்டிவிட்டிருக்கேன், அவனே அவனோட முகத்திரையை கழட்டிட்டு எல்லார் முன்னாடியும் சரண்யாவா காட்டிட்டு அதோடு இங்கிருந்து ஓடிடுவாள் பாரு. அப்படி அவள் ஓடினாதான் எனக்கு நிம்மதி” என சொல்ல தாஸோ 

   

”காலேஜ் ஹாஸ்டல்” என சைகை செய்ய

   

”போடா அதுக்காக சரண்யாவை என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது. அவதான் ப்ளான் போடுவாளா என்ன நம்ம கீர்த்தனாவும் நல்லாவே ப்ளான் போடுவா. அவள் போனா போறா விடு” என சொல்ல தாஸும் அமைதியானான்.

   

அந்நேரம் தேவாவிற்கு கீர்த்தனா போன் செய்தாள்

   

”ஹலோ”

   

“ஹலோ நான்தான் கீர்த்தனா பேசறேன்”

   

“சொல்லும்மா தெரியுது”

   

“இன்னிக்கு விக்ரம் வந்தான் சண்டை போட்டான். பெரியாளாகி என்னை தூக்கிட்டு போயிடுவேன்னு சொல்றான் எனக்கு பயமாயிருக்கு” என அவள் பதட்டமாக சொல்ல

   

”பயப்படாதம்மா நான் இருக்கேன்ல, பக்கத்திலதான் இருக்கேன் நான் பார்த்துக்கறேன்”

   

“அவன் பேசறத கேட்டப்ப எனக்கு தாமரை பாட்டிக்கு நடந்த விசயம்தான் கண்ணு முன்னாடி நிக்குது. என் நிலைமையும் பாட்டியை போல ஆயிடுமோன்னு பயமாயிருக்கு” என சொல்ல

   

”என்ன உளர்ற நீ எனக்குப் புரியலை” என சொல்ல உடனே தாமரை பாட்டி போனை வாங்கி அவர் பேசினார்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.