(Reading time: 38 - 76 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

   

“அதான் நான் முக்கியம் இல்லைன்னு சொல்லிட்டீங்களே அப்ப நான் இங்க இருந்தா என்ன இல்லாம போனா என்ன” என காட்டமாக சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியே வந்தான். நேராக ஒர்க்ஷாப்புக்குச் சென்றான். அங்கு தாஸ் இருக்கவே அவனிடம் முழுவிவரத்தையும் சொன்னான். அவன் தானும் வருவதாக சொல்ல வேண்டாம் என சொன்னவன்

   

”நீ இங்க ஒர்க்ஷாப் பார்த்துக்க, அப்புறம் விக்ரம் இனி இங்க வர்ற மாதிரியே தெரியலை, அதனால நீ இங்க சூப்பர்வைஸ் பண்ணு மறந்தும் என் வீட்டுக்குள்ள நீ போகாத யார் என்ன வேலை கொடுத்தாலும் செய்யாத? நீ இங்கயே இருந்து நிம்மதியாக சாப்பிட்டு தூங்கு, எல்லா பிரச்சனையும் முடிஞ்சி நான் வீட்டுக்கு வந்தபின்னாடி நீ வீட்டுக்கு வா, அப்புறம் பாரு கல்யாணம் அது இதுன்னு நிறைய வேலைகள் இருக்கு, நிக்க நேரம் கூட இருக்காது அதனால இருக்கற நேரத்தை தூங்கி சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்து கழிச்சிக்க” என சொல்ல தாஸும் சிரித்தபடியே சரியென தலையாட்ட

   

”பத்திரமா இருடா, ஒர்க்ஷாப் முக்கியம், ட்ரான்ஸ்போர்ட் ஜாக்கரதை நான் சொன்னதான் எந்த லாரியும் போகும், இனி நான் அப்பா சித்தப்பாவுக்கு எதுவும் செய்யப் போறதில்லை, இனிமே நம்ம வேலைதான் இங்க நடக்கும், இதனால அப்பா சித்தப்பா ஏதாவது பிரச்சனை பண்ணா சட்டுன்னு ஒர்க்ஷாப்பு ட்ரான்ஸ்போரட் மூடிடு. யாரும் உள்ள வரக்கூடாது, பிரச்சனை வராம பார்த்துக்க அப்புறம் வீட்ல நிக்க வைச்ச அந்த 10 லாரிகளையும் கொண்டாந்து ட்ரான்ஸ்போர்ட்ல சேர்த்துடு. இல்லைன்னா ஒண்ணு அதை வித்துடுவாங்க இல்லை அவங்க தேவைக்கு எடுத்துக்க போறாங்க”

   

என சொல்ல அவன் பலமாக தலையாட்டவும் 

   

”நானும் பார்க்கறேன் என் உதவி இல்லாம அந்த சரண் என்ன செய்றான்னு, எப்படி ஹாஸ்டல் வேலை நடக்குதுன்னு பார்க்கறேன். சரணை விட்டா இந்த விசயத்தை வைச்சே என்னை பழிவாங்குவான்னு தோணுது, இதுவரைக்கும் நான் பெரிய பெரிய கட்டிடம் எல்லாம் கட்டலை, ஏன் தாஸ் நாம ஏன் அந்த ஹாஸ்டலை கட்டக் கூடாது உன் தங்கச்சிதான் நல்லா ப்ளான் போடறாளே என்ன சொல்ற, நாம நாளைக்கு அந்த காலேஜ் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.