“நானும்தான் பாவம், உனக்காகவே ரெடியாகி பாரு லக்கேஜ்களோட வந்திருக்கேன், நீ எத்தனை நாள் இங்க இருக்கியோ அத்தனை நாளும் நானும் இங்க இருப்பேன்”
“அப்புறம்”
“அப்புறமா கல்யாணம்தான் சரி விடு அதை அப்ப பார்த்துக்கலாம் நீ என்ன செய்ற”
“பார்த்தா கண்ணு தெரியலை கோலம் போடறோம்” என சொல்லிக் கொண்டே பாட்டி அவனிடம் வர
“போடு போடு அழகா இருக்கு தாமரை”
“எது” என கீர்த்தனா கத்த அவனோ
“கோலம் அழகா இருக்குன்னு சொன்னேன்” என சமாளிக்க அவளோ
”தாத்தா உள்ள இருக்காரு”
“போய் பார்க்கறேன் நீ கோலம் போட்டு முடி”
“முடிச்சிட்டேன் நீங்க போங்க ஆனா, அவர் எப்படி உங்களை இங்க தங்க வைப்பாரு” என சொல்ல
”அதை நான் பார்த்துக்கறேன் நீ வாடா தேவா” என பாட்டி அவனை அழைக்க அவளும்
”ஓ சரி சரி வாங்க, பாட்டி எல்லாம் பார்த்துக்குவாங்க வாங்க உள்ள போகலாம்” என அவனை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார்கள் இருவரும்.
தேவா தாத்தா சுந்தரத்தை தேடிப்பிடித்தான். ஆபிஸ் ரூமில் ஏதோ பைல்களை பார்த்துக் கொண்டிருந்தவர் அந்நேரம் தேவா அங்கு வருவதைக் கண்டு சிரித்தார்