(Reading time: 38 - 76 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

எல்லாத்தையும் பொறுத்துக்கறேன் இல்லைன்னா அந்த பொண்ணை வெளிய அனுப்பிடுவேன்“

   

“அப்படியா சரி முதல்ல வெளிய அனுப்புங்க, நான் அவளை கூட்டிட்டுப் போறேன்” என சொல்ல அவரோ

   

”இல்லை இருக்கட்டும்” என பதட்டமாகச் சொல்ல

   

”தாத்தா நீங்க நினைச்சாலும் என்னையும் அவளையும் வெளிய விரட்ட முடியாது. தாமரை இருக்கறவரைக்கும் எங்களுக்கு பிரச்சனையில்லை”

   

”அவள் என் பொண்டாட்டி, அவள் பேரை வைச்சி கூப்பிட எவ்ளோ தைரியம் உனக்கு”

   

“அவள்தான் அப்படி கூப்பிட சொன்னா, நான் என் தாத்தாவை போல இருக்கேனாம், அதனால சொன்னா நானும் கூப்பிடறேன் உங்களுக்கென்ன இப்ப” என அவன் அலட்சியமாகச் சொல்ல அவனது முகத்தை பார்த்து கோபமான சுந்தரம் காட்டமாக பேசலானார். 

   

”கலையில 9 மணிக்கெல்லாம் டிபன் சாப்பிட வந்துடனும், மதியம் லன்ச் 1 மணிக்கு, ஈவ்னிங் காபி டீ ஸ்நேக்ஸ் 5 மணிக்கு தருவாங்க, நைட் டின்னர் 9 மணிக்கு அதுக்கப்புறம் தூங்கனும். நைட்டெல்லாம் டீவி பார்க்கக் கூடாது, கரெண்ட்டை தேவையில்லாம செலவு செய்யக்கூடாது பொறுப்பா இருக்கனும்”

   

“ஹாஸ்டல் போல இருக்கு”

   

“அப்படியே வைச்சிக்க இது ஹாஸ்டல்தான் போதுமா”

   

“சரி”

   

“உன் ரூமுக்கு போய் ரெடியாகி சரியா 9 மணிக்கு டைனிங் ஹாலுக்கு வா, அதுக்குள்ள எல்லாரும் வந்துடுவாங்க உனக்கு எல்லாரையும் நான் பரிச்சயம் பண்றேன்”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.