“வேற வழியில்லாமதான்”
“இந்த விசயம் அவங்களுக்குத் தெரியுமா”
“தெரியும் அவங்களும் வேற வழியில்லாமதான் தங்கறாங்க”
“சரியா போச்சி வேலைக்காவது நான் போலாமா அதுக்கும் ஏதாவது ரூல் இருக்கா”
“தாராளமா போ”
“கீர்த்தனாவுக்கும் வேலையிருக்கு அவளையும் கூட்டிட்டுப் போகனும் விடுவீங்களா”
“தாராளமா ஆனா வெளிச்சத்திலதான் போகனும், சாயங்காலம் 5 மணிக்கு அவள் இங்க இருக்கனும் புரியுதா”
”அவள் கூட வெளிய கடைகளுக்கு போக முடியுமா, ஊர் சுத்தி காட்டறது அப்படி இப்படி”
“போகலாம் ஆனா எங்க போனாலும் எங்க போற, எவ்ளோ நேரம் ஆகும்னு என்கிட்ட சொல்லனும், நீ பாட்டுக்கு அவளை வெளிய கூட்டிட்டு போய் ஏதாவது பிரச்சனை கொண்டு வந்தா என் பேர் கெடும், தப்பான இடங்களுக்கு அவளை நீ ஒரு நாளும் கூட்டிட்டுப் போக கூடாது போனா இங்கிருந்து விரட்டிடுவேன்”
”நான் நல்லவன் தப்பானவன் கிடையாது”
“போக போக பார்க்கத்தானே போறேன்”
”யாரையுமே நம்ப மாட்டீங்களா சரியான சந்தேக பிசாசா இருக்கீங்களே”
“அதிகமா பேசாதேன்னு இப்பதானே சொன்னேன்”