கணக்கு போடாத, அவள் கிராமம் அதே போல எல்லாரும் இருக்க மாட்டாங்க, கேட்ல, போர்டிகோல, ஷெட்ல, ஹால்ல எல்லாம் நான் சிசி டிவி கேமரா வைச்சிருக்கேன், நீ ஏதாவது திருட்டுத்தனமோ தப்புபண்ணா அது காட்டிக்கொடுத்துடும். நீ இங்க தங்க வந்திருக்கிற கெஸ்ட், ஆனாலும் உனக்கு நான் தனி ரூம் கொடுத்திருக்கேன் புரியுதா ஆனா அந்த ரூம்ல வசந்தனும் இருப்பான்.”
“வசந்தன் யாரு”
“என் 3வது மருமகளோட அண்ணன் பையன் டாக்டருக்கு படிக்கிறான். இன்னும் 1 வருஷம் இருக்கு படிப்பு முடிஞ்சதும் என் பேத்தியை கல்யாணம் பண்ணிக்கப்போறவன்”
“ஓ அதுல அவளுக்கு சம்மதமான்னு கேட்டீங்களா”
”இன்னும் கல்யாணத்தை பத்தி பேசிக்கலை அவள் சம்மதிக்கனும் அப்புறமாதான் எல்லாம் அதுவரைக்கும் நீ எதையும் உளறிவைக்காத”
“இதுக்கு நீங்க சொல்லாம இருந்திருக்கலாம்”
“அதிகமா பேசாத, சண்டை போடாத, இது வீடு ஓட்டல் கிடையாது, அதோட இங்க சட்டதிட்டம், ஒழுங்குமுறைகள், கட்டுப்பாடுகள் நிறைய இருக்கு, நேரத்துக்குதான் சாப்பாடு கிடைக்கும், தாமதமா போனா கிடைக்காது. வெட்டியா பொழுது ஓட்டக்கூடாது, கண்ட கண்ட நேரத்தில தூங்கி வழிய கூடாது, இது வீடு இல்லை கோவில் அப்படித்தான் நான் பார்க்கறேன், கோவில் போல நீயும் இருக்கனும், நினைக்கனும், பொய் சொல்லக்கூடாது, சிகரெட், தண்ணி தொட கூடாது. வீட்ல இருக்கற பொண்ணுங்களோட ஒழுக்கமா நடந்துக்கனும் உன்னால யாருக்கும் கஷ்டம் வரக்கூடாது முக்கியமா கீர்த்தனாவோட நிழலை கூட நீ தொடக்கூடாது”
“இது வீடா இல்லை ஜெயிலா இவ்ளோ கன்டிஷன் போடறீங்களே”
“எனக்குன்னு இந்த ஊர்ல நல்ல பேர் இருக்கு, அது உன்னோட செயலால பாழாகிடக் கூடாது. நேத்தே அந்த விக்ரம் வந்து கத்திட்டு போனான். ஏதோ தாமரைக்காக