”ரொம்ப அதிகாரம் பண்ணாதீங்க, வீட்டுக்கு வந்த கெஸ்ட்டுகளை அவமானப்படுத்தறீங்க”
“நான் வர சொல்லலையே”
“அப்ப நான் கீர்த்தனாவை கூட்டிட்டு என் வீட்டுக்குப் போறேன்”
“அவள் வந்தா தாராளமா கூட்டிட்டு போ வெளிய விக்ரம் சுத்திக்கிட்டு இருக்கான். உன் வீட்ல சரண்யாவோட அண்ணன் இருக்கான். உன் வீட்ல நடக்கற எல்லாம் எனக்கும் தெரியும், உன்னால எங்கயும் அவளை வைச்சி பார்த்துக்க முடியாதுன்னுதானே இங்க கூட்டிட்டு வந்த, அப்புறம் என்ன அமைதியா இரு அவளுக்காகதானே நீ வந்த, அப்ப நீயும் இங்கதான் இருக்கனும் வேற வழியில்லை” என கெடுபிடியாக சொல்ல
“சந்தோஷம்” என முனகிக் கொண்டே காபியை குடித்து டேபிள் மீது வைத்துவிட்டு எழ அவரோ
”நீ குடிச்ச காபி கப்பை நீதான் சுத்தம் செய்யனும், உனக்காக நான் வேலைக்கு ஆளுங்களை போட முடியாது” என சொல்ல அவன் முறைத்தபடியே காபி கப்பை எடுத்தான், வேலையாள் அவனுக்கு வழிகாட்ட வர அவனிடம் தனது லக்கேஜ்களை தர அதற்கும் தாத்தா
”உன்னோட வேலைகளை நீதான் செய்யனும்”
“என் கையில காபி கப் இருக்கு“
”சுத்தம் பண்ணிட்டு வந்து எடுத்துக்க” என சொல்ல தேவா தனக்குள்ளே நொந்துக் கொண்டே வேலையாளிடம்
”கிச்சன் எங்க இருக்கு வழி காட்டு” என சொல்ல அவனும் அழைத்துச் சென்றான். அதற்குள் தாத்தா அவனது லக்கேஜ்களை அவனது அறையில் வைத்துவிட்டு வசந்தனுக்கு போன் செய்து தேவாவை பற்றி சொல்லிவிட்டார்.