(Reading time: 38 - 76 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

கழட்டிவிட்டு வேட்டி பனியனுடன் மெத்தையில் படுத்தான்.

   

இருவர் படுக்கும் பெரிய அளவு கட்டில் என்பதால் தாரளமாக படுத்துக்கொண்டான் தேவா. ஏசி வேறு தன் மொபைலில் 8.30க்கு அலாரம் வைத்துவிட்டு உறங்க முயன்று 10 நிமிடத்தில் உறங்கிப் போனான்.

   

அலாரம் அடிக்கவும் எழுந்தான் தேவா மொபைலை ஆப் செய்தவன் அமர்ந்து பார்த்தான். வசந்தனோ வேகமாக உடை மாற்றிக் கொண்டிருப்பதைக் கண்டு

   

”ஹலோ டாக்டர் வசந்தன்” என அழைக்க வசந்தனோ திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தான்.

   

”நீங்கதான் தேவாவா”

   

“ஆமாம் என்ன இப்பவே ரெடியாயிட்ட”

   

“மணி 8.30 ஆகுதே சாப்பிட போகனும் நீங்க ரெடியாகலையா” என கேட்டுக்கொண்டே வந்து அவனிடம் கை நீட்ட தேவாவும் கை நீட்டி இருவரும் கைகளை குலுக்கிக் கொண்டார்கள்.

   

“இவ்ளோ அப்பாவியா இருக்கியே எப்படி நீ இந்த வீட்ல வந்து மாட்டின”

   

“என் அப்பாதான் என்னை விட்டுட்டுப் போனாரு”

   

“எத்தனை நாளா இருக்க”

   

“1 வருஷமா”

   

“உனக்கு கோயில்கட்டனும் எப்படித்தான் இங்க இருந்தியோ”

   

“ஆரம்பத்துல கஷ்டமா இருந்திச்சி அப்புறம் பழகிடுச்சி”

   

”ஆமா நானும் பக்கத்து வீட்லதானே இருக்கேன், உன்னை நான் பார்த்ததேயில்லையே”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.