“பழகிடுச்சி டைமுக்கு வரலைன்னா கோச்சிக்குவீங்களே, முன்னாடி வந்தாலும் நீங்க திட்டினீங்கன்னா என்ன செய்றது அதான் கரெக்டா வந்து நின்னேன்” என சொல்ல அங்கிருந்தவர்களில் சிலர் வாய் பொத்திச் சிரிக்க தாத்தா
”உஷ் என்ன சத்தம்” என அதட்ட அமைதி நிலவியது. பாட்டி செந்தாமரையோ தேவாவிடம் வந்தார்
”நீ உட்காருப்பா உட்காரு நான் பாரிமாறிடறேன்” என சொல்ல அவனும் அமர்ந்தான், கீர்த்தனாவை பார்த்தான் அங்கு அவள் இல்லாமல் போகவே பயந்தான்
”அய்யோ பாவம் கீர்த்தனாவை காணலையே டிபன் சாப்பிடாம பட்டினி கிடப்பாளோ சே சே இருக்காது அவள் ஏன் பட்டினி இருக்கனும் இந்த தாத்தா கத்தினா அவளை கூட்டிட்டு ஓட்டலுக்கு போய் சாப்பிட வைச்சிடலாம்” என நினைக்கையில் கீர்த்தனா கையில் ஒரு பாத்திரத்துடன் அவ்விடம் வந்தாள்.
”பாட்டி இந்தாங்க” என நீட்ட
”எல்லாருக்கும் பரிமாறுமா” என சொல்ல தாத்தாவோ தடுத்தார்
”இரும்மா பொறு அதுக்கு முன்னாடி ஒரு விசயம், புதுசா வந்தவங்களுக்கு இந்த வீட்ல இருக்கறவங்களை பத்தி தெரிஞ்சிக்கனும் அதனால தேவா எழுந்து உன்னை பத்திச் சொல்லு” என சொல்ல தேவா எழுந்தான்
”எல்லாருக்கும் வணக்கம் என் பேரு தேவா நான் பக்கத்து வீட்ல இருந்து வரேன். இந்த ஊர்ல நான் கன்ஸ்ட்ரக்ஷன் வேலைகளை செய்றேன், சொந்தமா லாரி ட்ரான்ஸ்போர்ட் அப்புறம் ஒர்க்ஷாப் வெச்சிருக்கேன், இன்ஜினியரிங் படிச்சிருக்கேன்” என சொல்லி விட்டு அமைதியானான் அதற்கு ரம்யாவோ
”கல்யாணம் ஆயிடுச்சா” என கேட்க அவன் அவளைப் பார்த்து சிரித்த படி