”இல்லைங்க”
”ஏன்” என கேட்க அவன் கீர்த்தனாவை பார்த்துவிட்டு
“இந்த வருஷத்துக்குள்ள பண்ணிக்கனும்”
“பொண்ணு ரெடியா இருக்காங்களா”
“தெரியலையே” என சொல்ல
”இன்ஜினியர் படிச்சிட்டு சாதாரண வேலைகளை செய்றியே, ஏதாவது பெரிய கம்பெனியில வேலைக்கு போக வேண்டியதுதானே” என தாத்தா சுந்தரத்தின் முதல் மகன் கேசவன் கேட்க
”என்ட்ட 100 பேர் வேலை செய்றாங்க, நான் அவங்களுக்கு முதலாளியா இருக்கேன்”
”படிச்ச படிப்புக்கு ஏத்த வேலையில இருந்தாதானே நாலு பேர் மதிப்பாங்க” என தாத்தா சுந்தரத்தின் இரண்டாவது மகன் வாசவன் கேட்க அதற்கு தேவாவோ
”கிடைச்ச வேலையை விட பிடிச்ச வேலையை செய்றது எனக்குப் பிடிச்சிருக்கு அதான்”
“மாசம் எவ்ளோ வருமானம் வரும்” என 3வது மகன் தனஞ்செயன் கேட்க
”வரும் தோராயமா ஆயிரங்கள்ல வரும்”
“போதுமா ஒரு குடும்பத்தை நடத்த” என முதல் மருமகள் பல்லவி கேட்க
”என் அப்பா, சித்தப்பா, மாமா எல்லாரும் உழைக்கிறாங்க அதுல வர்ற பணமே வீட்டுக்கு அதிகம்தான் நான் சம்பாதிக்கறது என் தேவைக்காக மட்டும்தான்”