(Reading time: 38 - 76 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

தேவாவிற்கு கீதாவை மிகவும் பிடித்துவிட்டது. அவன் சிநேகமாக அவளை பார்த்து

   

”நன்றிக்கா” என்றான் அவன் அக்கா என்றதுமே பூரித்துப் போனாள் கீதா.

   

”அக்காவா” என கீதாவின் மகள் மித்ரா வாய்பிளந்து கேட்க தேவாவோ

   

”பின்ன எப்படி கூப்பிடறது”

   

”டாக்டர்ன்னு கூப்பிடு”

   

“அது வெளியதானே வீட்டுக்குள்ளயுமா” என கேட்க

   

”ஆமாம் டாக்டர்அக்கான்னு கூப்பிடு” என மித்ரா சொல்ல கீதா அதட்டினாள்

   

”மித்ரா அமைதியா இரு” என அவளிடம் சொல்லிவிட்டு தேவாவிடம்

   

”நீ என்னை அக்கான்னே கூப்பிடு, இவள் என் பொண்ணு மித்ரா இவளும் டாக்டருக்கு படிக்கறா” என சொல்ல அவன் அவளை சிநேகமாக சிரிக்க அவளோ இளக்காரமாக சிரிக்கவே அவன் சிரிப்பு நிப்பாட்டி வசந்தனை பார்த்தான். அவனோ பரிதாபமாக அமர்ந்திருந்தான்.

   

”பாவம் இவனுக்கு இப்படி ஒரு திமிர் பிடிச்சவளா” என மனதில் நினைத்துக் கொண்டான்.

   

அடுத்து தாத்தாவே பேசினார்

   

”இவன் என் மூத்த பேரன் கேசவனோட மகன் பேரு பாலமுரளி, இந்த ஊர்ல எனக்கு சொந்தமா ஒரு ஆஸ்பிட்டல் இருக்கு, அங்க இவன் அட்மினா இருக்கான், இவன் என் 2வது பேரன் வாசவனோட பையன் பேரு ஸ்ரீதர் ஆஸ்பிட்டல்ல இருக்கற மெடிக்கல் டிபார்ட்மெண்டை பார்த்துக்கிறான். அதுக்காவே டிபார்ம் படிச்சான், இந்த பொண்ணுங்க பேரு ரம்யா, சுப்ரியா, முரளி, ஸ்ரீதரோட முறைப்பொண்ணுங்க” என சொல்ல அனைவருக்கும் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.