(Reading time: 38 - 76 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

சேர்த்து ஓரேடியாக 

   

வணக்கம் வைத்தான் தேவா. அனைவரும் அந்த வணக்கத்தை ஏற்றுக்கொண்டது போல தலையை ஆட்ட அமைதியாக அமர்ந்தான் தேவா அடுத்து கீர்த்தனா வந்தாள். பாட்டி உடனே மற்றவர்களிடம்

   

”இவள் பேரு கீர்த்தனா, வீட்டுக்கு விருந்தாளியா வந்திருக்கா நேத்தே இவளை அறிமுகம் படுத்த நினைச்சேன் ஆனா முடியலை. இப்பதான் எல்லாரும் ஒரு இடத்தில சேர்ந்திருக்கீங்க என் பொறுப்பில இவளை இங்க தங்க வைச்சிருக்கேன், நேத்தே வீட்டுக்கு வந்திருந்தா ஆனால் உங்களை எல்லாரையும் அவளுக்கு காட்ட முடியலை. டயர்டா இருந்ததால நீங்க எல்லாரும் ரெஸ்ட் எடுக்க போனீங்க. 2 வாரம் இல்லை 3 வாரம் இங்க இருப்பா அதுக்கப்புறம் இங்கிருந்து கிளம்பி போயிடுவா” என சொல்ல கீர்த்தனாவும் தேவா செய்வதையே பார்த்துக் கொண்டிருந்ததால் அவனை போலவே அனைவரையும் பார்த்து கைகூப்பி வணக்கம் என்றாள். அவள் அழகு சிலருக்கு வியப்பையும் சிலருக்கு பொறாமையையும் தந்தது. 

   

”இவளை எனக்கு தெரியும் பாட்டி என் ப்ரெண்ட் பவியோட பிரெண்ட்தான்” என மித்ரா சொல்ல எங்கே அங்கு விக்ரம் பெயர் வந்து திரும்பவும் தாமரை என்னை இளக்காரமாக பார்த்து சிரிப்பாளோ என பயந்து

   

”இனி பரிமாறலாம்” என தாத்தா சத்தமாக சொல்ல பாட்டியும் கீர்த்தனாவும் அனைவருக்கும் பரிமாற ஆரம்பித்தனர். வித விதமாக டிபன் ஐட்டங்கள் செய்யப்பட்டிருந்தது. இட்லி, தோசை, பொங்கல், பூரி, சப்பாத்தி என அதற்கு ஏற்ப சைட் டிஷ் என டைனிங் டேபிளே நிறைந்துவிட்டது. பெரிய டைனிங் டேபிள் 20 பேர் அமர்ந்து சாப்பிடலாம், ஒரு பக்கம் 9 இருக்கை மறுபக்கம் 9 இருக்கைகள் தலைமை என்ற இடத்தில் இருபக்க நடுவிலும் சேர் தனியாக இருந்தன. அதன் ஒரு பக்க இருக்கையில் தாத்தா அமர்ந்திருக்க அவருக்கு நேர் எதிராக இருந்த தனியான இருக்கையில் தேவா சென்று அமர்ந்தான்.

   

மற்ற இருக்கைகள் காலியாக இருந்த போதும் தேவாவின் நடவடிக்கையை கண்டு தாத்தா மெச்சிக்கொண்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.