”வீட்டுக்கு இப்படி ஒரு இம்சை புடிச்சவர் இருப்பாங்க போல, சந்தோஷமா சிரிச்சாலே பிடிக்காதே” என மனதுக்குள் திட்டிக்கொண்டே சாப்பிட்டு எழுந்தான்.
நேராக அவனது அறைக்குச் சென்றான். அங்கு வசந்தன்
”நான் வெளிய போறேன் வர்றீங்களா”
“நான் வரலை நீ போ நான் அப்புறமா போறேன் எனக்கு ஆபிஸ் 10 மணிக்குதான்” என சொல்ல அவனும் வெளியே சென்றான்.
தேவாவோ தாஸ்க்கு போன் செய்து விக்ரம் பற்றியும் தன் வீட்டில் நடக்கும் நிலவரம் பற்றியும் கண்காணிக்கும்படி சொல்லி விட்டு போனை கட் செய்தவன் மணியை பார்க்க அது 9.45 என காட்டவே காலேஜ் ஹாஸ்டல் நினைவுக்கு வர உடனே கீர்த்தனாவிற்கு போன் செய்தான்
”ஹலோ”
“கீர்த்தனா எல்லாரும் போயிட்டாங்கன்னா என் ரூமுக்கு வாயேன்“
”ஆனா தப்பு”
“இல்லைம்மா கொஞ்சம் வேலையிருக்கு அதான்”
“நான் ஆபிசுக்கு வரேன் அங்க பேசிக்கலாமே”
“ஓ பேசலாமே சரி ஒரு முத்தமாவது கொடுக்கலாமே”
“ம்ஹூம் அங்கதான் தருவேன் நான் இப்ப கிளம்பறேன் நீங்களும் வாங்க” என சொல்லிவிட்டு போனை கட் செய்ய அவனும் ஆசையாக அறையை விட்டு