”உங்க ஊர்ல முத்தத்துக்கு இட்லின்னு பேரா” என கேட்க அவளோ
”ம்ஹூம்”
“அப்புறம் முத்தம் கேட்டா இட்லி வைக்கற”
“ப்ச்ச் சும்மாயிருங்க இப்ப என்ன வேணும் சாப்பிடறதுக்கு”
“நீதான்”
“எல்லாரும் இருக்காங்க அப்புறமா பேசிக்கலாம் இப்ப என்ன வேணும் சொல்லுங்க”
“சரி சரி என்ன இருக்கோ வைச்சிட்டு போ” என சொல்ல அவளும் அவனுக்கு பொங்கல் வைத்து விட்டு செல்ல அவனும் சாப்பிடலானான். அடுத்து பூரி வைக்க வர அவனோ
”நீ எப்ப சாப்பிட போற”
“எல்லாரும் போனதும் பாட்டியோட சாப்பிடுவேன்” என சொல்லிக் கொண்டே பூரியை வைக்க சிரித்தான்
”கேட்காமயே பரிமாறிடற பொண்டாட்டிதான் புருஷன் மனசை புரிஞ்சிக்கிட்டு பரிமாறுவாங்க தெரியுமா”
“நானும் இப்ப உங்க பொண்டாட்டிதானே ஆமா உங்களுக்கு எது பிடிக்கும்னு எனக்கு எப்படித் தெரியும் அதான் எனக்கு பிடிச்சதை நான் வைச்சேன்” என அவர்கள் பேச பேச தாத்தா அதை கவனித்துக் கொண்டே இருந்தார்
”கீர்த்தனா அங்க என்ன பேச்சு, சாப்பிடறப்ப யாரும் பேசக்கூடாது அமைதியாக சாப்பிட்டு எழுங்க” என கத்த கீர்த்தனா ஓடிவிட தேவாவோ