“ஆமாம்”
“சரி நீங்க இங்க என்ன செய்றீங்க”
“வசந்தன் சொன்னான் இன்னொரு அடிமை வந்திருக்குன்னு, அதான் ஹலோ சொல்லிட்டுப் போலாம்னு வந்தோம்”
“ஹாய்” என ரம்யா கை நீட்ட கைகூப்பி வணக்கம் வைத்தான் தேவா, அதைப்பார்த்து இரு பெண்களும் கோரசாக
”ஓஓஓ” என ஊளையிட்டுவிட்டு
”சரி சரி சீக்கிரமா ரெடியாகி வாங்க இல்லைன்னா டிபன் கிடைக்காது” என சொல்லிவிட்டு அவர்கள் சென்றுவிட சிரித்தான் தேவா
”டைம் பாஸ்க்கு 2 பொண்ணுங்க இருக்காங்க. இதுவரைக்கும் எந்த பொண்ணோடவும் பழகினதில்லை. இங்க இருக்கற நாட்கள்ல கீர்த்தனாவோடவாவது நெருங்கி பழகனும் முடியுமா, டாக்டர் தாத்தா விடுவாரா சரி பார்ப்போம்” என தனக்குத்தானே சொல்லிக்கொண்டு சட்டையை மாட்டிக்கொண்டு வெளியே வந்தான்.
மணி அப்போதே 9 ஆக ஆரம்பித்திருக்க டைனிங் ஹாலில் அனைவரும் அமர்ந்துவிட்டார்கள் கடைசியாக வந்தவன் தேவாதான். அவனை கண்டதும் தாத்தா சுந்தரமோ
”லேட்டா வந்திருக்க” என சொல்ல தேவா தன் கையில் இருந்த வாட்சை பார்த்தான்
”கரெக்டா வந்திருக்கேன்” என சொல்ல தாத்தாவும் பார்த்தார்
”9 மணின்னா கரெக்டா 9 மணிக்கு கடிகார முள் வந்தாதான் வந்து நிப்பியோ”