“அப்ப அண்ணான்னு கூப்பிடு” என சொல்ல அவனும் சிரித்தான்
”சரிங்கண்ணா வந்துடுங்க” என சொல்லிவிட்டு அவன் சென்றுவிட தேவாவும் ரெடியாக குளிக்கச் சென்றான்.
பாத்ரூம் கதவு தட்டும் சத்தம் கேட்டு தேவாவிற்கு கீர்த்தனா நினைப்பு வரவே
“யாரு” என கேட்க மறுபக்கம் எந்த பதிலும் வராமல் போகவே வேகமாக துணியால் தன்னை துடைத்துக் கொண்டு அவசரமாக வேட்டி பனியன் அணிந்துக் கொண்டு வெளியே வந்தான். அங்கு இரு பெண்கள் இருக்கவே அதிர்ந்தான்
”யார் நீங்க” என கேட்க அவர்களோ அவனை அந்த கோலத்தில் பார்த்து தங்களுக்குள் ஏதோ பேசிச் சிரித்தனர்
”யார் நீங்கன்னு கேட்டேன்”
“நீதான் தேவாவா”
“ஆமாம் நீங்க”
“உன்னைப்போலவே இந்த வீட்ல வந்து மாட்டிக்கிட்ட 2 அடிமைகள்”
”ஓ அப்படியா” என சிரித்துக் கொண்டே சென்று கட்டிலில் அமர்ந்தான்
”அடிமைகள் பேர் தெரிஞ்சிக்கலாமா”
“இவள் பேரு ரம்யா, என் பேரு சுப்ரியா”
”நல்ல பேர் இந்த வீட்டு மருமகள்தானே நீங்க, இது உங்க அத்தை வீடுதானே”