”ஓ அப்படியா அப்ப உனக்குன்னு ஒரு வீடு இருக்கறப்ப, எதுக்காக இங்க வரனும், நீயே கன்ஸ்ட்ரக்ஷன் வேலை செய்றன்னா புதுசா உனக்குன்னு ஒரு வீட்டை கட்டி அதுல போய் தங்க வேணடியதுதானே” என 2வது மருமகள் திலகா கேட்க
“அதுக்கும் ஏற்பாடு பண்ணிட்டேன், இடம் இருக்கு நல்ல நாளா பார்த்து வீடு கட்ட ஆரம்பிச்சிடறேன், இந்த வருஷத்துக்குள்ள புது வீட்டுக்கு என் பொண்டாட்டியோட போயிடுவேன், அதுவரைக்கும் நான் இங்க இருக்கேன் வெறும் 2 வாரம்தானே அப்புறம் நான் தங்க வேற இடத்தை பார்த்து கிளம்பிடுவேன்
”யாருக்காகவும் நான் எதையும் செய்றதில்லை, எனக்கு பிடிச்சதை நான் செய்றேன், நான் நினைச்சா என் அப்பாகூடவே சேர்ந்து வேலை செய்திருக்கலாம் ஆனா, அதை விட முதலாளியா எனக்குன்னு ஒரு அடையாளத்தை உருவாக்க நினைச்சி எல்லாம் செய்றேன். யார் என்னைப்பத்தி என்ன சொன்னாலும் எனக்கு கவலையில்லை, எல்லா தொழிலுமே நல்ல தொழில்தான் ஏசியில வேலை பார்க்கறவன்தான் உசந்தவன்னு கிடையாதே”
”நல்லாவே பேசற உன் உழைப்பு உன் பேச்சில தெரியுது, நீ நல்லா வருவ” என 3வது மருமகள் கீதா சொல்ல
”நன்றி” என்றான் தேவா
”தேவா இவள் என் மனைவி செந்தாமரை, இந்த வீட்டு பொறுப்பு இவள் கையில இருக்கு, இது என் பெரிய பையன் கேசவன் டாக்டர், பக்கத்தில இருக்கறது அவனோட மனைவி இந்த வீட்டு மூத்த மருமகள் பல்லவி அவளும் டாக்டர், இவன் என் ரெண்டாவது பையன் வாசவன் இவனும் டாக்டர்தான் பக்கத்தில இருக்கறது அவன் மனைவி திலகா அவளும் டாக்டர், இவன் என்னோட 3வது பையன் பேரு தனஞ்செயன் டாக்டர் அது அவனோட மனைவி கீதா அவளும் டாக்டர்” என ஒவ்வொரையும் காட்டிச் சொல்ல சொல்ல தேவா வணக்கம் வைத்தான்.
அவர்களில் கீதா மட்டும் அவன் வைத்த வணக்கத்திற்கு பதில் வணக்கம் வைக்க