அவனிடம் இறுதியாக வந்த கீர்த்தனாவோ
”என்ன சாப்பிடறீங்க”
என கேட்க அவளையே விழுங்குவதைப் போல பார்த்தவன் மெதுவாக அவளிடம் யாருக்கும் கேளாமல் பேசினான்
”உன் விருப்பம்” என்றான்
”இப்படி சொன்னா எப்படி என்ன வேணும் சொல்லுங்க தரேன்”
“ஒரு முத்தம் கொடு” என கேட்க அவளோ சற்று தடுமாறியவள் அவசரமாக இட்லியை பரிமாறிவிட்டு சென்றாள்.
”முத்தம் கேட்டா இட்லி வைக்கறா, அவள் ஊர்ல முத்தத்துக்கு இட்லின்னு பேரோ” என நினைத்துக் கொண்டு இருக்கும் போதே பாட்டி செந்தாமரை வந்தார்.
”இந்தாப்பா” என சட்டினி சாம்பார் வைக்கவே
“நீ வை தாமரை உன் விருப்பம்தான் இனி என் விருப்பம்” என சொல்ல பாட்டி சிரித்துக் கொண்டே பரிமாறிவிட்டு அவனையே 2 நிமிடம் உத்துப் பார்த்தார். இட்லி சாப்பிட்டு முடித்தவன் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த பாட்டியிடம்
”என்ன பாட்டி அப்படி பார்க்கறீங்க”
“உன்னை பார்த்தா உன் தாத்தாவை பார்க்கற மாதிரியிருக்கு அதான்” என பெருமூச்சு விட அவர் விட்ட மூச்சுக்காற்று நெருப்பாக பட்டது சுந்தரத்துக்கு
மறுபடியும் கீர்த்தனா அவனிடம் வர ஆசையாக இம்முறை அவளிடம்