”ஆனா நான் பார்த்திருக்கேன் வெளிய என்னை விடறதில்லை, காலேஜ் முடிஞ்சா வீடு, வீடு விட்டா காலேஜ், எங்கயும் போகறதில்லை அதனால என்னை நீங்க வெளிய பார்த்திருக்க மாட்டீங்க” என சொல்ல
“உனக்கு பரவாயில்ல போர் அடிச்சா காலேஜ்ன்னு சொல்லிட்டுப் போயிடுவ”
“இப்ப காலேஜ் லீவு 3 வாரம் கழிச்சிதான் காலேஜ் திறப்பாங்க”
“ஓ காலேஜ் இல்லையா அப்புறம் ஏன் இப்படி அவசரமா ரெடியாகற”
“தாத்தாக்கு தெரிஞ்சா திட்டுவாரு, ஒழுக்கமா இருக்கனும் இல்லைன்னா திட்டுவாரு, இந்த வீட்ல இருக்கறவரைக்கும் இந்த வீட்டை கோயிலா நினைக்கனுமாம்”
என சொல்ல தேவா சுற்றி முற்றிப் பார்த்தான்”
“என்ன பார்க்கறீங்க”
“இங்கயும் கேமரா இருக்கான்னுதான்”
“இங்கல்லாம் இல்லை ஹால்ல, டைனிங் ஹால்ல, கிச்சன்ல அப்புறம் வெளிய போர்டிகோல கேட்ல, கார்டன்ல இருக்கு”
“தப்பிச்சேன். எங்க இங்கயும் வைப்பாங்களோன்னு சரி நான் குளிச்சிட்டு வரேன்”
“அப்ப நான் கீழே ஹாலுக்குப் போறேன்ங்க”
“தேவான்னே கூப்பிடு”
“என்னை விட நீங்க பெரியவரா இருக்கீங்க”