தேவாவோ கிச்சனுக்கு செல்ல அங்கு பாட்டியும் கீர்த்தனாவும் டிபன் செய்துக் கொண்டிருந்தார்கள். அவனை கண்டதும் கீர்த்தனா சிரித்தாள்
”உன் நிலைமையும் என் நிலைமையும் ஒண்ணுதான்” என தேவா சொல்ல
”தெரியும் அதான் இங்க நானும் வேலை செய்றேன்” என கீர்த்தனா சொல்ல அவனோ காபி மக்கை கழுவி பத்திரமாக செல்பில் அடுக்கிவிட்டு
”எத்தனை நாள் நாம இங்க இருக்கனும்” என கேட்டாள் கீர்த்தனா
“2 வாரம்”
“பேசாம என் ஊருக்கு போயிடவா நான் ஹாஸ்டல்லயே தங்கிக்கிறேனே”
“வேணாம் அங்க விக்ரம் வருவான்”
“உங்களால அவரை சரிக்கட்ட முடியாதா”
“என் எதிரியாயிருந்தா நான் டீல் பண்ற விதமே வேற, இவன் என் நண்பன், பக்குவமா நடந்துக்கப் பார்க்கறேன், அவன் ஏற்கனவே வேலை கிடைக்காத துயரத்தில தற்கொலை செஞ்சிக்க பார்த்தவன், நான் காப்பாத்தி என்கிட்ட இருக்கற ஒர்க்ஷாப்ல வேலைக்கொடுத்தேன். உன்னால அவன் மறுபடியும் தற்கொலை பண்ணிக்கிட்டா என்னாகிறது, உன் பேர் வெளிய வரக்கூடாது, பிரச்சனை பெரிசாக கூடாதுன்னு பார்க்கறேன் புரிஞ்சிக்க கீர்த்தனா” என தேவா சொல்ல அவளும் சரியென தலையாட்டவும் அவர் சிரித்து
“சந்தோஷம் ஆமா நீ எந்த ரூம்ல இருக்க”
அதற்கு பாட்டியோ