“சரி” என சொல்லும் போதே வேலையாள் காபியுடன் வர அதை வாங்கி குடித்தவன்
”இன்னொரு விசயம்”
“இன்னுமா” என அவன் நொந்துக் கொள்ள
”இங்க நீ தங்கற வரைக்கும் உன் வேலையை நீதான் செய்யனும், இந்த வீட்டு ஆளுங்களுக்குதான் வேலைக்காரங்க வேலை செய்வாங்க உனக்கு, கீர்த்தனாவுக்கு, அப்புறம் ரம்யா, சுப்ரியா, வசந்தன் இவங்களுக்கெல்லாம் கிடையாது”
“ரம்யா, சுப்ரியா யாரு”
“என் முதல் மற்றும் 2வது மருமகள்களோட அண்ணன் பொண்ணுங்க”
“ஓ சரி அப்புறம்”
“உன்னோட சேர்த்து 5 பேரும் உங்களுக்கான வேலைகளை நீங்களேதான் செய்துக்கனும்”
“இது அநியாயம் உங்க வீட்டுக்கு கெஸ்ட்டா வந்தவங்களை இப்படியா வேலை வாங்குவீங்க”
“யார் வர சொன்னா உங்களை, நீங்கதான் இங்க தங்க வந்தீங்க நானா கூப்பிடலை”
“ஓஹோ அப்படி போதா கதை ஆக உங்களுக்கு 5 பேரையும் பிடிக்கலை”
“ஆமாம்”
“அப்புறம் ஏன் வீட்ல சேர்த்தீங்க”