”பகைமை காட்டற நேரமா இது, என் தாத்தாவுக்கும் உங்களுக்கும் அப்படி என்ன பிரச்சனை”
“அது உனக்குத் தேவையில்லை கேட்டதுக்கு பதில் பேர் என்ன” என அதிகாரமாக சுந்தரம் கேட்க
இவருக்கு நம்ம தாத்தாவே மேல் என மனதில் நினைத்தவன் அமைதியாக பதிலளித்தான்.
“தேவா”
“தேவா நல்ல பேர்தான் நீ என்ன வேலை பண்ற”
“ம் கன்ஸ்ட்ரக்ஷன் வேலைகள் செய்றேன். லாரி ட்ரான்ஸ்போரட் அப்புறம் ஒர்க்ஷாப் வெச்சிருக்கேன்”
”சரி இந்தா இந்த பைலை படி, உனக்கு குடிக்க காபியை வரவழைக்கறேன்” என சொல்லி ஒரு பைலை அவன் முன்னாடி வைத்துவிட்டு போன் மூலம் வேலையாளுக்கு காபியை கொண்டு வர ஆர்டர் செய்தார். தேவாவோ அந்த பைலை சந்தேகமாக எடுத்துப் படித்தான். 5 நிமிடம் கழித்து சிரித்தவன்
”என்ன சார் இது ஓவரா இருக்கு, வீட்ல தங்கறதுக்கு கூட ரூல்ஸ் அக்ரிமெண்ட் தேவையா இது”
“உன்னை பத்தி தெரியாதே, உன்னால ஏதாவது பிரச்சனை வந்தா என்ன செய்றது அதான்”
“இது ஓவர், பக்கத்து வீட்லதானே இருக்கேன் நீங்க என்னை பார்த்ததில்லை, என் தாத்தாவை ஒண்ணும் செய்ய முடியலைன்னு என்னை வைச்சி செய்ய முயற்சி செய்றீங்களா நடத்துங்க” என சொல்லிக் கொண்டே ஒரு இடத்தில் கையெழுத்து போட்டு அந்த பைலை திருப்பிக் கொடுத்தான்.
”இதப்பாருப்பா இது டாக்டர்கள் குடியிருக்கற வீடு, என் மனைவியை பார்த்துட்டு தப்பு