எதேச்சையாக கீர்த்தனா தேவாவை பார்த்தாள். வெட்கத்தில் கன்னம் சிவந்தவள் அவனிடம் வந்து நின்றாள்
”என்ன விசயம் எதுக்கு வந்தீங்க” என அமைதியாக கேட்க அவனோ சிரித்தான்
”உனக்காகத்தான்”
“கையில பை இருக்கு”
“உன்கூட இங்க இருக்கலாம்னு வந்தேன்”
“என்ன விசயம் சொல்லுங்க, ஏதாவது பிரச்சனையா”
“உன் நினைப்பாவே இருந்திச்சி நேத்து நீ வேற போன்ல அழுதியா பயந்தியா அதான் என்னால தாங்க முடியலை”
“அதுக்கு இப்படியா நீங்க வர்றது, நான் வேணா உங்க வீட்டுக்கு வரட்டுமா”
“வேணாம் அங்க சரண் இருக்கான்”
“சரணா என்ன விசயம்” என கேட்க அவனும் நடந்தைச் சொல்ல அவளோ
”பொய், டீல் கேன்சல் ஆயிடும்னு பயந்துதானே இங்க வந்தீங்க”
“அவன் அண்ணன் என்ன பெரிய இவனா, 2 அடி போட்டா டீல் ஓகே சொல்லிடுவான் பார்க்கறியா ஊருக்குள்ள என் ஆளுங்க இருக்காங்க நான் ஒரு பார்வை பார்த்தா போதும் அவனை தூக்கிடுவாங்க.”
“அய்யோ அப்படி பண்ணாதீங்க பாவம்”