(Reading time: 20 - 39 minutes)
Oru veedu iru vaasal
Oru veedu iru vaasal

கடைசியாக அதிலும் ஆபீசு நேரம் முடிவதற்கு ஒரு நிமிடம் முன்பு ரோஜா உள்ளே வந்தாள். யூனிபார்ம் போல ஒரு சுடிதார் ப்ளூ கலர் நேற்றும் அதேதான் இன்றும் அதேதான் அதைக்கண்டு வியந்தான்

   

”இவள் இயல்பே இதுதானா இல்லை வெளி பார்வைக்கு நடிக்கறாளா எல்லாரும் மதிக்கனும்னு இப்படி நடந்துக்கறாளா கவனிக்கனும்” என நினைத்தவன் ஆபீசை கண்காணிக்கலானான்.

   

நேற்றே இவன் ஜாலியாக அனைவரிடமும் பேசிய காரணத்தால் பெரிதாக இவனை பார்த்து யாரும் பயப்படவில்லை, எப்படியும் இவன் சிலநாட்கள் இருப்பான் பின்பு சென்றுவிடுவான் என்ற கோணத்திலும் இவன் மீது பயம் இல்லை, இயல்பாக தங்கள் வேலைகளை செய்தபடி இருந்தார்கள். ஆனந்தும் அவ்வப்போது போன் கால் பேசுவது போல அங்கும் இங்கும் நடமாடியபடியே வேலை செய்பவர்களை நோட்டமிட்டான் 

   

சில நேரம் வாக்கிங் செல்வது போல அலைந்தபடி அனைவரையும் கண்காணித்தான், அவனை ரோஜா கண்காணித்தபடி இருப்பதை அவன் கவனிக்கவில்லை, அவன் பார்க்கும் போதெல்லாம் ரோஜா அவள் இருப்பிடத்தில் இல்லாமல் வேலை செய்பவர்களிடம் ஏதோ பேசிக் கொண்டு இருந்தாள். அவன் பாராத சமயம் அவள் தன் இருப்பிடத்தில் அமர்ந்து அவனை கவனிக்கலானாள்.

   

அவளின் செயல் அவனுக்கு எரிச்சலை தந்தது, மதியம் லன்ச் ப்ரேக் கான்டீனுக்கு அனைவரும் செல்ல அவளும் சென்றாள். அங்கும் மற்றவர்களுடன் இணைந்து சாப்பிட்டபடியே கதைகளை பேசிக் கொண்டிருந்தாள். அவளின் செயலை வெறுத்தான் ஆனந்த்

   

”எந்நேரமும் பேச்சுதானா, மாமா இல்லை அதனால இவள் வேலை செய்யாம அரட்டை அடிக்கறா வரட்டும் மாமா வந்ததும் இவளை பத்தின புகாரை நான் வாசிக்கிறேன்” என மனதில் நினைத்துக் கொண்டான், மாலை வரை வேலை ஆபீஸ் நேரம் முடிந்ததும் அனைவரும் கிளம்பிச் செல்ல வழக்கம் போல ரோஜாவும் கிளம்பினாள். அவளை பார்த்தபடியே வந்த ஆனந்தோ

   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.