(Reading time: 23 - 46 minutes)
Pennennum ponnazhage
Pennennum ponnazhage

தூங்குங்க” என சொல்லிவிட்டு தன் அறைக்குச் சென்றாள் பூங்கொடி சாப்பிட கூட இல்லை தொய்வாக படுக்கையில் படுத்து கண்கள் மூடினாள் பசி வயிற்றை கிள்ளியது அண்ணியின் பேச்சு அவளின் மனதை ரணமாக்கியது, இதற்கு நடுவில் ஈஸ்வரன் வந்து நின்றான் 

   

”இவன் கெட்ட கேட்டுக்கு முதலிரவு ஒண்ணுதான் குறைச்சல், கொஞ்சம் கூட கூச்சம் இல்லாம என்னை வைச்சிக்கிட்டு என் அண்ணன்கிட்ட முதலிரவு பத்தி பேசறான் பாரு, துணிச்சல் ஜாஸ்திதான் இருந்தாலும் இவனுக்கு முதலிரவு மேல எல்லாம் ஆசையிருக்கும்னு நான் நினைச்சே பார்க்கலை, அப்படியே முதலிரவு நடந்துட்டாலும்” என உள்ளுக்குள் சொல்லிக் கொண்டே உறங்கியவளுக்கு பாதி இரவில் ஈஸ்வரனுடன் முதலிரவு அறையில் இருப்பது போன்ற கனவு வரவும் அதிர்ந்து எழுந்துக் கொண்டாள் 

   

கனவு கண்டு பதறியவள் அதை நினைத்து புன்னகை பூத்தாள் கடிகாரத்தைப் பார்த்தாள் மணி 3 என காட்டியது அதற்கு மேல் அவளுக்கு உறக்கம் பிடிக்கவில்லை, கனவை நினைத்துக் கொண்டே உறங்க இயலாமல் தவித்துக் கொண்டே நேரத்தை ஓட்டினாள் பூங்கொடி.

   

அந்த கனவை நினைத்துக் கொண்டே இருந்தவள் அலாரத்தை கவனிக்க மறந்தாள், அது ஓவென அலற அதில் அவள் பதட்டமாகி எழுந்து அந்த அலாரத்தை அணைத்தாள் அதில் வீட்டில் இருந்த அனைவருமே எழுந்துக் கொண்டார்கள், குழந்தைகள் உள்பட அவளுக்கு சங்கடமாகிப் போனது அவசரமாக அறையை விட்டு வெளியே வர அவளை ஆச்சர்யமுடன் அனைவரும் பார்த்தார்கள், அவளோ ஏதும் பேசாமல் நைசாக கிளம்பி வெளியேறிச் சென்று குளித்துமுடித்து கோலமிட வர அவளது அண்ணி கோலம் போட அவளுக்கு வியப்பாக இருந்தது

   

”என்ன அண்ணி நீங்க கோலம் போடறீங்க”

   

”சாப்பிடற சாப்பாட்டுக்கு ஏதாவது வேலை செய்யுன்னு உங்கம்மா சொன்னாங்க அதான் வந்தேன் போதுமா, இந்த கோலம் போட்டாதான் டிபனே கண்ல காட்டுவீங்க போல சே” என அலுத்துக் கொள்ள பூங்கொடியோ நொந்தபடியே வீட்டிற்குள் சென்று தன் தாயிடம்

   

”ஏன்மா அண்ணியை திட்டினியா”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.