(Reading time: 42 - 84 minutes)

 

சொல்லிவிட்டான் .,..! அவனின் காதலை சொல்லியே விட்டான் ... அவளின்பால் ஈர்க்கப்பட்ட மனதை பற்றி அவன் சொல்லியேவிட்டான் ... ஏற்கனவே  மீராவின் மூலம் அறிந்திருந்தாலும்கூட அவனை காதல் சொல்லும்போது அவளால் அமைதியாய் இருக்க முடியவில்லை .. கோபமும் இல்லை ... காதலிக்கிறேன் என்று சொல்லவும் முடியவில்லை .. எழுந்து சென்று விடவும் கால்கள் அனுமதி தரவில்லை ... கண்களோ அவனின் முகத்தை விட்டு அகலமாட்டேன் என்று அடம் பிடித்தது ... இதயம் மட்டும் , ' இதோ நான் வேகமாய் துடிக்கிறேன் ' என்று தன் செய்கையில்  மற்ற உறுப்புகளுக்கு தெரியப்படுத்தியது ... முத்துமுத்தாய் வேர்த்து, மெல்லிய காற்றில்  கலைந்த  கூந்தலை ஒதுக்கவும் எண்ணம் எழாமல் சர்வமும் நீ மட்டும்தான் ; என் கண்கள் காண்பது உன்னைத்தான் என்பதுபோல அவனையே  வைத்தக்கண் வைக்காமல் பார்த்தாள் ஜானகி .....

" உன்னை நான் முதன் முதலில் பார்த்தது உங்க வீட்டில் இல்லை ஜானகி .. நான் பார்த்து மனதை பறிகொடுத்த பெண் அன்று கண்ணீரோடு நின்றுகொண்டிருந்தவள் இல்லை ......"

" .."

" எஸ் .... அதுக்கு முன்னாடியே நான் உன்னை பார்த்திருக்கேன் ..." என்றவன் சட்டென தன் செல்போனில் இருந்த புகைப்படத்தை காட்டி,

" இது எப்போ எடுத்த போட்டோ நு தெரியுதா ? " என்றான்....

கருநீலநிற புடவை, முழுதாய் பின்னலிடாமல் விரித்திருந்த அடர்ந்த கூந்தல், மிதமான ஒப்பனை... அழகு போட்டிவைத்தால் இவை அனைத்தையுமே தள்ளி வைத்துவிட்டு ' நானே வெற்றியாளன் ' என்று சொல்வது போல அமைந்த அவளின் வசீகர புன்னகை .... மொத்தத்தில் தோகை விரித்த மயில்போல மிளிர்ந்தாள் ஜானகி .. அந்த இடம் .... அதே ஆர்ட் எக்சிபிஷன் தான் .... அவளின் ஸ்ரீராமனின் கை வண்ணத்தை அவள் பார்த்த, அவளை  ஸ்ரீராம் பார்த்த அதே இடத்தில்தான் ரகுராமும் அவள் பார்த்திருக்கின்றான் ...

ஜானகிக்கு ரகுராமின் காதல் தெரியும் .. அவனிடம் பேசியதின் மூலம் அவன் எந்த அளவு தன்னை விரும்புகிறான் என்பதும் தெரியும்.. ஆனால் தன் மீதான காதல் எங்கு என்று ஆரம்பமானது என்று அவளுக்கும் தெரியாதல்லவா?

" இது ................ இது .. ஆர்ட் எக்சிபிஷன் தான் "

" ம்ம்ம் ஆமா ... அங்க தான் நான் உன்னை முதல் தடவை பார்த்தேன் ..... ஸ்ரீராம் வரைஞ்சிருந்த ஓவியத்தை பார்த்து நீ ரசிச்சது ... சந்தோஷத்துல துள்ளியது ... உன் ப்ரண்ட்ஸ் கிட்ட அதை வர்ணிச்சது .. பாரதியார் கவிதையை ரசிச்சு சொன்னது, அங்கிருந்து  போகின்ற வரை அந்த ஓவியத்தையே ரசிச்சுகிட்டு நின்னது ... எல்லாம் எனக்கு தெரியும்... உன் வாய்ஸ் கேட்டு திரும்பிய சிலரில் நானும் ஒரு ஆள்... ஆனா பார்த்தது பார்த்ததுதான் .... உன் பேச்சா, சிரிப்பா, குழந்தைதனமா ? எதுன்னு தெரியாமலே உன் வசம் நான் கவரபட்டேன் ... தப்புன்னு மூளை சொல்லியும் கூட என் கைகளை தானாகவே உன்னை படமெடுத்தது ... "

"அப்போ ராமை உங்களுக்கு ? "

" அந்த ஓவியத்தை வரைஞ்சவர்னு மட்டும்தான் முதலில் தெரியும்... அதுக்கு பிறகு உன்னை ஒருதலையாய் காதலிச்ச போது, உனக்கே தெரியாமல் உன்னை பலமுறை தூரத்தில்  இருந்து பார்த்தபோதுதான் அவரு உன் மனசுல இருக்காருன்னு தெரிஞ்சது " என்றவன் கண்களை இறுக மூடி அந்த தூணில் சாய்ந்துகொண்டான்....... " உன்னை இழந்துவிட்டேனடி நான் " என்று சொல்லமால் சொல்லியது அவனின் முகபாவனை ...

என்ன மாதிரியான ஒரு சூழ்நிலை இது ? எப்படி அவள் அவனுக்கு ஆறுதல் சொல்ல முடியும் ? என்னவென்று நான் சொல்ல??? என  தனக்குள் கேட்டுகொண்டவளை அவனின் துயரம் தானாகவே தொற்றிக்கொண்டது... ஏதோ ஒன்று உறுத்த மெல்ல கண்களை திறந்தவன் கண்ணீருடன் ஜானகி இருப்பதை பார்த்து திடுக்கிட்டான் ....

" ஹேய் ஜானு ... என்னடா ? "

"......."

" மன்னிச்சிரு மா .. உன்னை வருத்தப்பட வைக்க நான் இதையெல்லாம் சொல்லலே .... சரி விடு வா போகலாம்" என்று அவன் எழ முயல, சட்டென அவனின் கை பிடித்து நிறுத்தியவன் கோபமாய் பேசினாள்....

" உட்காருங்க ரகு ........................ உட்காருங்கன்னு சொல்றேன்ல .... "

" .... "

" ரகு ... நீங்க பேசி முடிக்கிறதுக்கு முன்னாடி நான் கொஞ்சம் பேசவா ? "

" .... ம்ம்ம் "

" நீங்க என்னை விரும்புறிங்கன்னு எனக்கு முன்னாடியே தெரியும் "

" வாட் ???????? " என அதிர்ந்தான் ரகுராம் ...

" எஸ் தெரியும் ..... உங்க அண்ணி தான், எனக்கு எல்லாம் தெரியும்னு நெனச்சுகிட்டு சொல்லிட்டாங்க "

" மீரா அண்ணியா? "

" எஸ் "

" அவங்களுக்கு எப்படி ? "

" கிருஷ்ணா சார் சொல்லி இருக்கலாம்"

" .... தெரிஞ்சும் நீ ....."

" சொல்லுங்க ...தெரிஞ்சும் நீ ? தெரிஞ்சும் நான் ஏன் எதுவும் சொல்லலன்னு கேக்குறிங்களா ? "

"..."

" என்னால என்ன பண்ண முடியும் ரகு ? தெரிஞ்சும் என்னால உங்க மேல கோபபட முடில.. எனக்கு வருத்தமாகத்தான் இருக்கு .. போயும் போயும்  இந்த பாவபட்டவள் மேல உயிரையே வைக்கிறிங்களேன்னு "

" ஜானு"

" நான் பேசி முடிச்சிடுறேன் ரகு "

"... "

" நீங்க என்னை விரும்புறிங்கன்னு சொன்னதும் கோபம் வந்தது நிஜம்தான் .. அதை விட அதிர்ச்சி பல மடங்கு இருந்துச்சு .... ஆனா இதெல்லாம்  மாறிடும் நு நெனச்சேன்  ... உங்களை விட்டு விலகி விடுவதை விட , என் மனம் மாறாது என்பதை கூடவே இருந்து உணர்த்திடலம்னு நெனச்சுதான் நான் எதுவும் சொல்லாமல் அமைதியா இருந்தேன் ... ஆனா ஆனா "

"..."

" உங்க கண்ணியம் ... அதையும் மீறி உங்க நட்பு கல்லாய் இருந்த என் மனசை இலகுவாக்கிடுச்சு.... ஒரு ஆணால தான் விரும்புற பெண்ணை  சில நேரம் தாயாக பார்க்க முடியும், சேயாக பார்க்க முடியும் , தோழியாக பார்க்க முடியும்.. ஆனா இப்படி தான் காதலிக்கிற சுவடே தெரியாமல் எல்லாவேளையிலும் ஒரு தோழனாக இருக்க முடியுமா ? "

"... "

" சாதாரண ஜானகியாய் என்னால எந்த முடிவும் எடுக்க முடில்ல ரகு ... ஆனா உங்க தோழியாய் என் மனசு உங்களுக்காகதான் வருந்துது.. இப்போ கூட நான் அழுததும் சொல்ல வந்ததை நிறுத்திட்டு போகலாம்னு சொல்றிங்களே ??? ஏன் ரகு ??? எப்போதான் நீங்க மாற போறீங்க ? உங்களுக்குனு ஒரு சுய விருப்பமே இல்லையா ? என்னை பார்த்ததும் காதலிச்சிங்க, ஆனா என் மனம் ராமிற்கு சொந்தம்னு தெரிஞ்சதும் விலகி போனிங்க, உங்க காதலை விட்டு கொடுத்திங்க, இப்போ என் நிலை தெரிஞ்சதும் என் மனம் காதலை ஏற்காதுன்னு புரிஞ்சுகிட்டு நட்பு கரம் நீட்டுறிங்க.... ஏன் ரகு இப்படிலாம் ? உங்களுக்குனு சொந்த விருப்ப வெறுப்பே இல்லையா ? "

" .. "

" ஜானகிக்கு தூக்கம் பத்தாது , ஜானகிக்கு தலைவலி , ஜானகிக்கு பசி , ஜானகிக்கு  வேலை டென்ஷன்.. ஜானகிக்கு இது பிடிக்கும் அது பிடிக்கும், ரவி பிடிக்கும் சுஜா பிடிக்கும் , பாரதியார் கவிதையை பார்த்தா ஜானி மனசு கஷ்டப்படும் , ஜானிகிக்கு பாட்டு அனுப்பனும் , ஜானகி சிரிச்சுகிட்டே இருக்கணும், ஜானகி முகம் வாட கூடாது, ஜானகி மனசு கஷ்டப்பட்ட கூடாது .... ஜானகி ஜானகி ஜானகி ........................................................................ ரகு லைப் ல ஜானகியை தவிர எதுவுமே இல்லையா ? "

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.