(Reading time: 42 - 84 minutes)

 

வள் போன வழியையே பார்த்தவன்,

" உன்னை விட ஓர் அழகா அன்பே ? " என மனதிற்குள் கேட்டு கொண்டான் ..

சூர்யா, சந்துரு, அபிராமி , சிவகாமி , பானு, ரகுராம், ஜானகி அனைவரும் ஆகாஷின் வீட்டை அடைந்த அதே நேரம் நம்ம சிவா ஐ பி எஸ்  உம் அங்கே வந்தான்.. இவன் எங்க இங்கே ? என்று ஜானகி ரகுராமை பார்க்க, அதற்குள் அங்கு வந்தவன்,

" ஹா ஹா .. டோன்ட் வொர்ரி ஜானகி மேடம்... கல்யாண மாப்பிளை எனக்கும் தெரிஞ்சவர் " என்றான் ..

உறவுகள் அனைவரும் புடைசூழ, மணமக்களுக்கே உரிய  லட்சணத்தில் சுப்ரியா- ஆகாஷ் ஜோளிஜோளித்தனர் .. அங்கும் இங்கும்  ஓடி ஆடி கொண்டிருந்த நித்யா, ஆகாஷ் திருமாங்கலயம் கட்டும் வேளையில் அட்சதையை  தேட , தன் கைகளில் இருந்த அட்சதையை தந்தான் சிவா.. சிவா ஐ பி எஸ்... அவனை பார்த்ததும் அவள் " கார்த்தி..தி ....." எனவும் " எஸ் நித்தி ...தி " என்று அவளைப்போலவே சொல்லி சிரித்தான்  அவளின் கார்த்தி என்கிற சிவகார்த்திகேயன் ஐ பி எஸ்... எப்போதும் கடுவன் பூனைபோல  இருப்பவன் இப்படி சிரிப்பானா ? என்று ஜானகி ரகுராம் விழிக்க, நீங்களும் திருதிருன்னு விழிச்சுகிட்டே இருப்பிங்களாம் ....

அன்பு வாசகிகளுக்கு குட்டி கவிதை...,

தமிழ் எவ்வளவு அழகென்பது மட்டுமே எனக்கு தெரியும்

என் எழுத்தும் அழகுதான் என்று நீ காட்டினாய்

இசை எவ்வளவு மென்மையானது என்பது மட்டுமே எனக்கு தெரியும்

உன் கதையே புது இசைதான் என்று நீ உரைத்தாய்

ஓவியக்கலை தெரியவில்லையே என வருந்தினேன்

என் எழுத்துகளை ஓவியமாய் ரசிக்க நீ கற்றுகொண்டுத்தாய்

என் பேனா நிமிர்ந்து நிற்பது பிடிமானத்தில் அல்ல

நீ என் மீது வைத்திருக்கும் அபிமானத்தில் தான் ...

வண்ண வண்ண மலர்களை அலங்கரித்து

விண்மீன்களை கண்மீனாய் கோர்த்து

அன்பால்  சுகமான ஜாலங்கள் செய்து

உறவெனும் பூவின் புன்னகை மதுவை வார்த்தெடுத்து

இன்பமாய் கை கோர்த்து கீர்த்தனம் பாடி

பிரியாமல் இணைந்து கொண்டாடுவோம்

புவனமெங்கும் இனிய தீபாவளி ..!

அனைவருக்கும் என் உளமார்ந்த தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்... இனிய புன்னகையை இதழிலும், அன்பை இதயத்திலும் சுமந்து வாழ்த்துவோர்

சூர்ய பிரகாஷ்- அபிராமி

சந்திரப்ரகாஷ் - சிவகாமி

அர்ஜுன் - சுபத்ரா

கிருஷ்ணன்- மீரா

ரகுராம் - ஜானகி

சிவகர்த்திகேயன் - நித்யா

ஆகாஷ்- சுப்ரியா

கார்த்திக்- கீதா

சுஜாதா - ரவிராஜ்

பிரபாகரன்- பத்மா

பானு(அர்ஜுனின் தாயார்), ஸ்ரீராம், சஞ்சய், சண்முகம்(ஜானகியின் தந்தை), சதாசிவம் ( மீராவின் தந்தை ), லக்ஷ்மி  ( ஆகாஷ்& நித்யா தாயார் ), ராதாமோகன்  (ஆகாஷ் -நித்யா தந்தை )

பஞ்ச பாண்டவர்கள் தீம் - மது , கீர்த்தனா, மலர், மீனா, ப்ரியா என்கிற விஷ்ணுப்ரியா

வாணி & தோழிகள்

மற்றும்

புவனா என்கிற புவனேஸ்வரி  ​_/\​_

சித்திரை பூப்போலே சிதறும் மத்தாப்பு

தீ ஏதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு

முத்திரை பசும்பொன்னே ஏன் இந்த சிரிப்பு?

முகமோ மலரோ ஏன் இந்த ரசிப்பு ?

மின்னொளி வீசும் உன் எழில் கண்டால்

வேறென்ன வேண்டுமடா?

வேறென்ன வேண்டுமடா ?

உன்னை கண்டு நான் ஆட

என்னை கண்டு நீயாட

உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி

ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாக கலந்து

உறவாடும் நேரமடா

உறவாடும் நேரமடா ... 

தொடரும்

Episode # 15

Episode # 17

{kunena_discuss:734}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.