(Reading time: 42 - 84 minutes)

 

" காட் இவ்வளவு நேரமா தூங்கினேன் ? அர்ஜுன் எப்படி நம்ம ரூமிருக்கு வந்தாங்க ? இந்த ஸ்வாதி , நிவிதா எங்க " என்று யோசித்தாள் சுபத்ரா... ஆம், அர்ஜுன் சுபத்ரா அதே ஹோட்டலில்தான் இருந்தார்கள்.. ஆனால் சுபத்ரா எண்ணுவது போல அது அவர்களின் அறை அல்ல ..  அர்ஜுன தங்கியிருந்த இன்னொரு அறை அது ... குளிருக்கு தோதாக கம்பளி ஆடையும் உடுத்தி இருந்தவள் சட்டென திடுக்கிட்டாள் .. இது நாம கலையில் போட்டிருந்த டிரஸ் இல்லையே!! எனினும் அர்ஜுன் மீது அதீத நம்பிக்கை கொண்டவள் அவனே சொல்லட்டும் என்று காத்திருந்தாள்.... ஐயோ சாப்பிடானோ என்னவோ என்று தெரியலையே " என்று எண்ணியவள் தனது செல்போனை தேடி கீதாவிற்கு போன் போட்டாள்...

" ஹே கீதா "

" ஹலோ சுபா .. நீ கண் முழிச்சுட்டியா ? சாரி டி .. எல்லாம் என்னாலதான் ... அர்ஜுன அண்ணா மட்டும் இல்லன்னா என்ன ஆகிருக்கும் "

" ஹே ரிலாக்ஸ் ரிலாக்ஸ்... நான் இப்போ  நல்லாதானே டி இருக்கேன் ..அதுவும் என் அர்ஜுன் இருக்கும்போது எனக்கென்ன கவலை ? ஆமா நீங்கலம் எங்க போனிங்க ? இன்னுமா ஊரு சுத்திட்டு இருக்கீங்க ? "

" ஹே மக்கு ...நீ இருக்குறது நம்ம ரூமில் இல்ல ... உன் ஹீரோ ரூமில் "

" என்ன ?? "

" ஆமா ... அர்ஜுன் அண்ணா நம்ம கூடத்தான் ஊட்டி வந்திருகாரு ... அதே ஹோட்டலில் வேற ரூமில் தங்கி இருந்தாராம் .. நீ இருக்குறது இப்போ அவர் ரூமில் தான்...."

" ஓ ..உனக்கு எப்படி தெரியும் ? "

" அண்ணாதான்  என்னையும் நிவியையும் கூப்பிட்டாரு ... உனக்கு டிரஸ் மாத்திவிட்டுடு , சாப்பாடு கூட ஊட்டி விட்டோமே ... ஞாபகம் இல்லையா ? "

" இல்லடி .."

" எப்படி இருக்கும் மேடம் ? இப்படி ஹை பீவரில் இருந்தா ? சொன்னா கேட்டியா நீ ? எல்லாரையும் கலங்கடிசுட்டே..... அர்ஜுன் அண்ணாதான் டாக்டரை கூப்பிட்டுட்டு வந்து, அவர் போனதும் உனக்கு சுட சுட மிளகு கஞ்சி தேடி வாங்கிட்டு வந்து, எங்களை கூப்பிட்டு உனக்கு டிரஸ் மாத்திவிட சொல்லி ....."

"....."

" ரொம்ப பயந்துட்டாருடீ "

"..."

" ஹலோ இருக்கியா ? "

" ..."

" சுபா அழாதே டி ..... "

"..."

" உன்னை கஸ்டபடுத்த இதை சொல்லல  சுபா ..நீ சின்ன பொண்ணு இல்ல .. உன் ஒரு ஆளின் உடல்நிலை எவ்வளவு பேரை பாதிக்கிறது பார்த்தியா ? குறும்புத்தனம் வேற, பொறுப்பு வேற சுபா .. நீ அடம் பிடிக்காமல் நாங்க சொன்னப்போதே ரூமில் ரெஸ்ட் எடுத்திருந்தா இப்படி ஆகிருக்குமா சொல்லு ? அர்ஜுன் அண்ணா வரலன்னா ? உன்னாலே நெனைச்சு பார்க்க முடியுமா ? நீ இல்லாமல் எப்படி அண்ணா  இருந்திருப்பாங்க ? யோசிச்சு பாரு "

உண்மைதானே புன்னகையே ஆபரணமாய் தரித்தவன், ஒவ்வொரு நொடியும் இறந்திருப்பான் அல்லவா? ஒருவேளை அவள் இல்லாத உலகில் வாழமாட்டேன் என்று அவன் முடிவெடுத்தாலும் அதில் ஆச்சர்யபடுவதற்கில்லை அல்லவா ? சுபத்ராவை நீங்கி அவனால் வாழ முடியுமா? ஏற்கனவே தன் தோழி ஜானகியின் நிலையை பார்த்தவள் தானே இவள் ?  அதே இடத்தில் அர்ஜுனன் இருந்தால்? எப்போதும் நிமிர்வுடன் இருப்பவன் கதிரவனையே காணமல் இருளில் இருப்பானே !

" அர்ஜுன் ... என் அர்ஜுன் ... உங்களை காயபடுத்திட்டேனே அர்ஜுன் " என மனதிற்குள் விம்மினாள் சுபத்ரா ...

" இதெல்லாம் நான் உன்கிட்ட சொல்றதுக்கு காரணம் இருக்கு சுபா .. நீ படுத்திய பாடுக்கு உன்னை நல்ல திட்டி தீர்க்க சொன்னேன் அண்ணன் கிட்ட .. அதுக்கு அவர் உன் முகத்தை பார்த்தால் திட்டவே மனசு வரல.. பரவாயில்லைன்னு சிரிக்கிறார் ... ஆனால் அவர் கண்ணில் எவ்வளவு தவிப்பு இருந்துச்சு தெரியுமா ? இப்படி அவரின் நியாயமான  கோபத்தை கூட உனக்காக விட்டு கொடுத்துட்டு இருக்கார் .,.. அதான் எனக்கு மனசு கேக்கல .,. இப்போ நான் கேக்குறது எல்லாமே அர்ஜுன் அண்ணாவுக்காகத்தான் "

" மன்னிச்சிரு கீதா.. "

" என்கிட்ட ஏனடி மன்னிப்பு கேட்குற?  முதலில் அண்ணாகிட்ட பேசு ... "

" எனக்கொரு உதவி வேணும் டீ "

" என்னடி பெரிய வார்த்தஎல்லாம்  "

" சரி கேளுடி ப்ளீஸ் "

" ஓகே ஓகே என்ன ஹெல்ப் சொல்லு ? "

" அர்ஜுன் சாப்பிட்டாரா தெரியல ... கொஞ்சம் சாப்பாடு ஏதும் வாங்கிடு வரலாம் .. என்னோடு கடைக்கு வர்றியா ? "

" நீ ஒன்னும் எங்கயும் போக வேணாம் ...நான் கார்த்திக்கிட்ட சொல்லுறேன் ...."

" தேங்க்ஸ் டீ "

" அடி விழும் உனக்கு ... சரி நான் கார்த்திக் கிட்ட பேசிட்டு கூப்பிடுறேன்"

போனை வைத்த சுபத்ரா அர்ஜுனனையே பார்த்துக்கொண்டிருந்தாள் ... கலைந்த கேசம், உறக்கத்திலும் அவன் முகத்தில் இருந்த இறுக்கம் அவன் நிம்மதியில்லாமல் உறங்குகிறான் என்பதை காட்டியது ... என்னை கண்மணி  நு வார்த்தைக்காக அழைக்காமல் செயலிலும்கூட என்னை கண்ணின் மணியாய் காப்பவன் அல்லவா என் அர்ஜுனன் ...? என்னை மன்னிச்சிருங்க அர்ஜுன்  என மனதிருக்குள் மருகியவள் ஏதோ ஒரு உந்துதலில் அவன் பாதம் பற்றி மன்னிப்பு கோர விழைய, அவளின் கரங்கள் அவன் பாதம் தீண்டுமுன் அவளின் கண்ணீர்த்துளி அவன் பாதம் தொட்டுவிட சட்டென கண்விழித்தவன்

" ஷ்ஷ்ஷ்ஷ் குட்டிமா என்னதிது ? " என்று அவளை தன்னுடன் இழுத்து அணைத்து கொண்டான் ...

" அஜ்ஜு ....... அஜ்ஜு..... நீங்க ...என்னை ... சாரி .... நீ ... ங்க.. தூங்கலையா ? " என்று விழிகள் விரிய திக்கி திணறி கேள்விகேட்டாள்....

" இல்லடா நீ என் மடில இருந்து எழுந்ததுமே நானும் விழிசிட்டேன் ... நீ கீதாகிட்ட பேசுறதை இண்டராப் பண்ண வேணாம்னுதான் கண் மூடி இருந்தேன் ... என்ன காரியம் பண்ணிட்ட குட்டிமா .... ஏன் என் பாதத்தை தொட வந்த நீ "

" என்னை மன்னிச்சிருங்க அர்ஜுன் .... எவ்ளோ கஷ்டபடுத்திட்டேன் உங்களை.. ரொம்ப பயந்துட்டிங்களா ? " என்று அவன் தடையை பிடித்து கேட்டாள்....

" அப்படிலாம் இல்ல கண்மணி ... உனக்கு ஒன்னுனா நான் துடிக்கிறதும் எனக்கு ஒண்ணுன்னா நீ துடிக்கிறதும் இயல்புதானே "

சட்டென அவன் வாயை பொத்தியவள்

" அப்படி சொல்லாதிங்க அர்ஜுன் .. உங்களுக்கு ஒன்னும் ஆகக்கூடாது"

" ஹே ரிலாக்ஸ் சுபி .......... இந்த பேச்சை விடு குட்டிமா.... உனக்கு இப்போ பீவர் எப்படி இருக்கு ? " என்றபடி அவன்  நெற்றியில் கை வைத்தான் ..

" ம்ம்ம் இப்போ பெட்டர் தான் .... பசிக்கிதா டா? "

" ம்ம்ம்ம் இல்ல அர்ஜுன் .... கார்த்திக் சாப்பாடு வாங்கிட்டு வருவான் .. நீங்க இங்கயே இருங்க ... என் மேல கோபமே இல்லையா அர்ஜுன் ? "

" எதுக்குடா ? "

" எதுக்கா ? பிவர் இருந்தும் நல்லா இருக்கேன்னு பொய் சொன்னதுக்கு, ப்ரண்ட்ஸ் தடுத்தும் வெளிய வந்ததுக்கு ..அப்பறம் ........" என்றவள் நடந்ததை நினைத்து பார்த்து ஒரு கணம் நடுங்கி அவனை கட்டிகொண்டாள்...

 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.