(Reading time: 42 - 84 minutes)

 

" து சாத்தியமில்லை ரகு "

" ஏன் சாத்தியமில்லை ... கல்யாணம் ஆகிட்ட ரகுராம் பேச்சு மீறிடுவான் எல்லையை மீறிடுவான்னு நினைக்கிறியா? "

" ச்ச்ச ச்ச இல்ல... அது உங்க காதலுக்கு நான் செய்ற துரோகம்  இல்லையா ரகு ? எனக்கு ஒரு ஆதரவு வேணும் என்பதற்காக நான் உங்களை எப்படி மணக்க முடியும்? "

" இது பாரு ஜானகி , மனசை கட்டுபடுத்துற ஷக்தி எல்லா நேரத்துலயும் நம்ம கைகளில் இல்லை.. என்றாவது உன்  மனசு மாறலாம் இல்லையா ? "

" மாறலன்னா ? "

" மாறலன்ன நான் கடைசி வரை உன் நண்பனாக இருக்கேன்.. சிம்பல் ...."

" இது அவசியமா ரகு ?"

" தெரியாது பட் இதுதான் என் முடிவு .. இஸ்டம் இருந்தா உன் சம்மதத்தை சொல்லு நாம கல்யாணம் பண்ணிக்கலாம் .. இல்லன்னா ஜானகி எப்படி பிடிவாதமா தனிமரமா இருப்பாளோ அதே மாதிரிதான் ரகுராமும் இருப்பான் "

" ரகு !! "

" என் மனசுல உள்ளதை கொட்டிடேன் ஜானகி .. இனி உன் முடிவுதான் .. இதுக்கு நீ இப்போவே உன் பதிலை சொல்லனும்னு இல்லை .. எப்படியும் நான் சொல்ற முதுமை காலம் வர்றது 40 வர்ஷம் இருக்கு ... அதுவரை கூட டைம் எடுத்து  யோசிச்சு சொல்லு .. நாம ஸ்ட்ரேட்டா 60தாம் கல்யாணம் பண்ணிகிட்டாலும் எனக்கு ஓகே தான் "

அவன் சொன்ன வித்தத்தில் அவள் முகத்திலுமே புன்னகை அரும்பியது ....

" எப்படித்தான் இவ்வளவு சீரியசான விஷயத்தை கூட உங்களால் இலகுவா சொல்ல முடியுதோ போங்க .... "

" ஹா ஹா அதுதான் ரகுராம் "

" அய்யே ரொம்பதான் "

" சரி அப்போ உன் முடிவு ??"

" அதான் 40 வருஷம் டைம் இருக்கே ? அப்பறம் சொல்றேன் " என்று அவள் அலட்ச்சியமாய் தோள் குலுக்க ...

" வாயாடி" என்று சிரித்தான் ரகுராம் .. இருவருமே புன்னகைத்தாலும் இருவரின் மனமும் ஆழ்ந்த சிந்தனையில் தான் இருந்தது...

" உன் மனம் மாறும் ஜானகி ... தோழியாக இல்லை .. காதலியாகத்தான் நீ என் மனைவியாகுவாய்.. கண்டிப்பா அது நடக்கும் ... " - ரகுராம்

" காலம்பூரா எனக்கு நண்பனாக இருக்க வேண்டுமா ? இதுதான் உன் ஆசையா ரகு ? என்னால் ஏன் முடியவே முடியாதுன்னு மறுக்க முடியல ... நான் பாவபட்ட பெண்ணாக இருக்கலாம்... ஆனா உன் காதலில் நான் கொடுத்து வைத்த புண்ணியவதிதான்...... நான் உன்னை ஏன் காதலிக்கவில்லை ? அல்லது காதலித்தும் காதல் இல்லை என நினைக்கிறேனா? " - ஜானகி

" எப்பவும் சூழ்நிலை நமக்கு சாதகமாய் இருக்கும்போதே  முடிவெடுக்கணும் ஜானகி .. காற்று எப்பவும் ஒரே திசையில் வீசாது...காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் நு சொன்னது இதுதான் ! சில நேரம் சில பொருட்கள் நம் கைவிட்டு போனால்தான் அதன் தேவையும் அவசியமும் விளங்குமோ??? " – விதி

விதியின் விளையாட்டை அறியாத இருவருமே ஒரு வித நிம்மதியில் இருந்தனர்.. ரகுராமிற்கோ இனி தன் காதலை மறைக்க வேண்டாம் என்ற நிம்மதி .. ஜானகிகோ அவன் மனம் இனி பாரத்தை சுமக்காது என்ற நிம்மதி ... ( ஜானு உங்க நிம்மதியே உங்களின் காதலை பிரதிபளிக்கிது .. அது எங்களுக்கு புரியுதே ... உங்களுக்கு புரியலையா )

காரில்,

" என்ன சிரிப்பு ரகு ? "

"  இல்ல வேணாம் "

" சொல்லுங்க "

" இல்ல நீ தப்பா நினைப்பே "

" அட சொல்லுங்க பா "

" இல்ல இனி நான் ரேடியோ ல பாட்டுகேட்டு மர்மமா பீல் பண்ணாம நேராக உனக்கே டெடிகேட் பண்ணிடலாம் "

" அட அட அட.... உதை விழும் ... யாரோ இப்போதான் கண்ணியம் புண்ணியம்னு பேசினாங்களே யாருப்பா அது "

ஏதோ சொல்ல எத்தனித்தவன் அவளின் கண்கள் குறும்பில் மின்னுவதை ரசித்தபடி வானொலியை உயிர்பித்தான் ...

அன்பே அன்பே எல்லாம் அன்பே

உனக்காக வந்தேன் இங்கே

சிரித்தாலே போதும் என்றேன்

மழை காலம் கண்ணில் மட்டும்

வேண்டாம் என்பேன்

பனிக்கால போர்வை கொண்டு வந்தேன்

என் மேஜை மீது பூங்கொத்தை

என் மேஜை மீது பூங்கொத்தை

வைத்தது நீ தானே

நான் வானம் பார்க்க வழி செய்த

சாரலும் நீ தானே

என் இதயம் மெல்ல சிதையில் தள்ள

நீ தான் நிலவைக் காட்டித் தேற்றினாய்

ரகு " உனக்குத்தான் பாடல் " என்பது போல பார்க்க ஜானகி சிரித்துக்கொண்டே ஜன்னல் பக்கம் பார்வையை செலுத்தினாள்...

" நிச்சயம் இவள் மாறிவிடுவாள்" என்று மனதிற்குள் எண்ணிய ரகுராம் மனதிற்குள் உல்லாசமாய் துள்ளினான் ... அதன் பிறகு இருவருமே அலுவலக வேலையில் மூழ்கிவிட அன்றைய நாள் அமைதியாய் சென்று கொண்டிருந்தது ... மாலையில் அந்த சிவா ஐ பி எஸ் வராமல் இருந்திருந்தால் அன்றைய தினம் இருவருக்குமே நிம்மதியாய் கழிந்திருக்கும் .. ஆனால் இப்பொழுது? இரவாகியும் உறங்காமல் துடித்தன காதல் கொண்ட அவ்விரு நெஞ்சங்களும் .. அவங்களை பார்க்குறதுக்கு முன்னாடி அதே இரவில் ஊட்டியில் என்ன நடந்துச்சு பார்ப்போம் வாங்க ....

ன்றிரவு,

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சுபத்ரா மெல்ல கண்விழித்து பார்த்தது முதலில் அர்ஜுனனைத்தான் ... அவள் அவனின் மடியில் உறங்கிகொண்டிருக்க, அர்ஜுனன் தலையணையை நிமிர்த்தி வைத்து  அதன் மீது சாய்வாக அமர்ந்தது அப்படியே உறங்கிகொண்டிருந்தான்... எவ்வளவு நேரம் இப்படி அமர்ந்திருக்கிறான் என்று சிந்தித்தபடி எழுந்தவள் கடிகாரத்தை பார்த்தாள் ...இரவு மணி 11.30 ..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.