(Reading time: 42 - 84 minutes)

 

" த்தை "

" சொல்லு ரகு "

" உங்ககிட்ட பேசணும் .. உள்ள வரலாமா ? "

" இதென்ன கேள்வி ரகு ...உள்ள வா ..... ஜானு கிச்சன்ல  காபி இருக்கும் எடுத்துட்டு வர்றியா? "

" வேணாம் அத்தை ... " என்று மறுத்த ரகுராம் அவர்கள் இருவருக்குமே காத்திருக்காமல் ஹாலில் சென்று அமர்ந்து கண்களை இறுக மூடிக்கொண்டான் ... அவனின் கவலை  தோய்ந்த முகம் ஜானகியை வாட்டியது .. அவளுக்கும் இது பேரதிர்ச்சிதான் ...ஆனால்  இப்பொழுதும் தன்னிலையை கூட உணராமல் அவனுக்காக வருந்தியவள், அவனுக்கு குடிக்க நீர் கொண்டு வந்தாள்....

அவளை நன்றியுடன் பார்த்தவன், நீரை குடிக்கும்போதே பானு அவனெதிரில் அமர்ந்தார் ..

" சொல்லு ரகு "

அவரின் முகத்தை கூர்ந்து நோக்கினான் ரகுராம் ... அர்ஜுன் ஏற்கனவே தன் தாய்க்கு அவன் ஜானகி மீது கொண்ட காதலை பற்றி தெரியும் என்று கூறியிருந்தான் ... தெரிந்துமா எங்களை பிரிக்கிறீர்கள்? என்பதுபோல அவன் பானுவை பார்க்க, பானுவோ சலனமே இல்லாமல் அவனின் பார்வையை எதிர்கொண்டார் ... இதற்குல்மேல் அமைதியாய் இருக்க முடியாது என்று நினைத்தவன், அருகில் இருந்த ஜானகியின் கையை பிடித்து

" அத்தை நான் ஜானகியை விரும்புறேன் .... அவ கழுத்து தாலி ஏறுனா அது நான் கட்டினால் தான் ... இதை அந்த சிவாகிட்ட சொல்லிடுங்க " என்றான் .. ஜானகியோ அதிர்ச்சியாய் பார்க்க, பானுவோ அவன் சொன்னது தன் முடிவை பாதிக்கவில்லை என்பதுபோல புன்னகைத்தார்....

" எதுக்கு  டென்ஷன் ரகு ? உட்காரு .. முதலில் அவ கையை விடு "

" முடியாது அத்தை .. அவளை நான் கைவிட முடியாது "

" ரகு  சொல்றதை கேளு "

" நீங்க சொல்லுங்க அத்தை.. எதுக்கு இந்த அவசர ஏற்பாடு யாரு அவன் ? "

" அதான் சொன்னேனே ...சிவா எனக்கு தெரிஞ்ச பையன் .. நல்லவன் ஜானகியை நல்லா பார்த்துப்பான் ... "

" யாரை கேட்டு அத்தை  இந்த முடிவெடுத்திங்க ? "

" ஜானகி நான் வளர்த்த பொண்ணு ... நான் யாரை கேக்கணும் ? " அவரின்  கேள்வியில் ஸ்தம்பித்து நின்றாள் ஜானகி.... என் அத்தையா இவர் ? என்பது போல  அவரை பார்த்தாள்.... அவள்  புறம் பார்வையை திருப்பிய பானு  அலட்ச்சியமாக

" இது பாரு ரகு .. ஜானகி நான் வளர்த்த பொண்ணு.. அவள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து நாங்க இத்தனை வருஷம்  காத்திருந்தாச்சு ... ஆனா அவ மாறலை... முன்னமாதிரி இல்ல ரகு , இப்போ அர்ஜுனனுக்கும் சுபத்ரா வந்தாச்சு .... இவ ஒருத்திக்காக மத்த எல்லாரும் கஷ்டபட்டு நிற்கனுமா ? "

" அதுக்காக ? "

" அதுக்காகத்தான் நானே இவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும்னு முடிவு பண்ணிட்டேன்.... கட்டாயப்படுத்தியாவது "

" இது அபத்தமா இருக்கு அத்தை .... ஜானகி லைப் பத்தி  நெனச்சு பார்த்திங்களா? "

" ரகு !!!!!! சிவா ஒன்னும் கெட்டவன் இல்ல "

" நானும் அதை சொல்ல வரல... முன்ன பின்ன தெரியாதவன் அவளை எப்படி புரிஞ்சுப்பான் ? "

" நீ அவளை புரிஞ்சுகிட்டவன் தானே  உன்னை அவள் ஏத்துகிட்டாளா? " அவரின் கேள்வியில்  இருவருமே உறைந்து நின்றனர் ... ரகுராமின் பிடியும் தளர்ந்தது .. அதை ஜானகியும் உணராமல் இல்லை .. அவன் முகம் பார்க்காமல் தரைமீது பார்வை பதித்து நின்றிருந்தாள் ஜானகி ..

" எனக்கு எல்லாம் தெரியும் ரகு ... நீயும் தானே அவளுக்காக காத்திருக்க ? உன் மனசை அவ புரிஞ்சுகிட்டாளா ? எத்தனை பசங்க உன்னை மாதிரீ பொறுமையா இருப்பாங்க சொல்லு ? நீயும் எனக்கு மகன் மாதிரி தானே ? இதுவே அர்ஜுன் ஒரு பொண்ணுக்காக வைட் பண்றேன்னு அவன் வாழ்க்கையை பார்க்காமல் இருந்தால் என்னால் பொறுத்துக்க முடியுமா ரகு ? உன் வாழ்க்கை வீணாவது அவ கண்ணுக்கு தெரியலையா ?அவ உன் காதலுக்கு சரி சொன்னாளா? " அவன் பிடி இன்னும் தளர்ந்தது ..இருப்பினும் திக்கி திணறி

" அது ..... அது ... அத்தை ... இன்னைக்குதான் நான் சொன்னேன் அத்தை "

" அப்போ இப்ப சொல்ல சொல்லு ரகு .. நான் ரகுவை விரும்புறேன் அத்தை .. எங்களை பிரிக்காதிங்கன்னு சொல்ல சொல்லு நான் சிவா கிட்ட  ஜாதகம் ஒத்து வரலன்னு  சொல்லி இந்த கல்யாண பேச்சை நிறுத்துறேன் "

படபடக்கும் இதயத்துடன் ஜானகியை பார்த்தான் ரகுராம் ...

" சொல்லிவிடு ஜானகி ... இப்போதாவது சொல்லிடு .. என்னை பிடிக்கலன்னாலும் சரி சொல்லு... அட்லீஸ்ட் கல்யாணத்துக்கு பிறகும் நீ நீயாக இருப்ப.... நீ  கைமாறி போனா உன் வாழ்க்கையே மாறிடும் பெண்ணே .. ப்ளீஸ் " என்று கண்களால் பேசினான்....

ஜானகிக்கோ பானு அப்படி பேசியதே பேரதிர்ச்சி !! எத்தனை பேரின் வாழ்வில் நான் தடையாக இருக்கிறேன் ? சுபத்ரா, அர்ஜுன், ரகுராம் .... இபோ என்ன செய்வது ? நான் இப்போ சரி சொன்னா, அத்தை கேட்டதுக்காக அல்லது என்னை காப்பாத்திகிறதுக்காக சொல்றது மாதிரி இருக்குமே? ரகு கோவிலில் கேட்டபோது கூட நான் சரின்னு சொல்லலியே ! இப்போ சொன்னா அதுல முற்றிலும் சுயநலம் மட்டும்தானே இருக்கும் ?" என்று எண்ணியவள் பதில் பேசாமல் இருந்தாள்.. ஜானகியையே பார்த்துகொண்டு நின்றான் ரகுராம் .... எத்தனை நிமிடங்கள் அப்படியே நின்றார்களோ, கடிகாரத்தின் ஓசை அவர்களை நடப்புக்கு கொண்டுவர நிமிர்ந்து அவளை பார்த்தான் ரகுராம் .... " உன்னிடம் இதை எதிர்பார்க்கவில்லை " என முணுமுணுத்தவன் வெடுக்கென அவளின் கையை விட்டுவிட்டு " நான்தான் தேவையில்லாத கற்பனையை வளர்த்துவிட்டேன் ...மன்னிச்சிடுங்க " என்றபடி அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் ...

" ரகு ஒரு நிமிஷம் "

" சொல்லுங்க "

" இந்த விஷயம் அர்ஜுனுக்கு தெரிய வேணாம் .. நீங்க ரெண்டு பேருமே அவன்கிட்ட சொல்ல கூடாது "

" இனி சொல்றதுக்கு என்ன இருக்கு ? " என்று கேட்டவன் அங்கிருந்து போக,

" போகாதே ரகு " என்று ஜானகியின் உள்மனம் சொன்னது .. அது அவனை எட்டியதோ என்னவோ சட்டென திரும்பினான் .. ஒரே ஒரு நொடி என்றாலும் கூட அவள் கண்களில் ஒரு மின்னல் தோன்றி மறைந்ததை அவன் உணர்ந்தான் ..பிறகு " இப்படி கற்பனை பண்ணி பண்ணித்தான் நீ இந்த நிலைமையில் இருக்கடா " என்று தன்னைத்தானே திட்டிக்கொண்டு, பானுவிடம்

" அத்தை இன்னும் ஒரு வாரம் ஆபீஸ் ல முக்கிய வேலைகள் இருக்கு ... அதுவரைக்கும் அவங்களை வேலைக்கு வர சொல்லுங்க " என்றுவிட்டு சென்றான் ... அவனின் நடையும், அவன் பன்மையில் அழைத்ததும் " இனி நான் வரவே மாட்டேன்  போ" என்று சொல்லாமல் சொன்னது !

( வராமல் அவனால் இருக்க முடியுமா ? அவளும்தான் அவனின்றி வாழ்வாளா ?? ...... இனிதான் கண்ணாமூச்சி ஆரம்பம்)

ஓகே ரிவர்ஸ் ல திருப்புன கடிகாரம் இப்போ நைட் டைம் கு வந்திருச்சா ? நம்ம அர்ஜுன்-சுபி சமாதனம் ஆகிய பிறகு, அவளை மீண்டும் உறங்க வைத்துவிட்டு அர்ஜுனும், வரவேற்ப்பு அறையில் சென்று உறங்கினான் ... சோ நாம அவளை டிஸ்டர்ப் பண்ணாமல் இன்னொரு  ஜோடியை பார்ப்போம்...

 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.