(Reading time: 42 - 84 minutes)

 

க் டக் டக்

அந்த கண்ணாடி ஜன்னலை  யாரோ தட்டும் சத்தம் கேட்டு அசந்து தூங்கி கொண்டிருந்த மீரா கண்விழித்தாள்... இந்நேரம் யாராக இருக்கும் ? திருடனோ ??? ஜன்னல் பக்கம் முதுகு காட்டி படுத்திருந்தவள் பக்கத்தில் இருந்த ஹென் பேக்கில் வைத்திருந்த மிளகாய் பொடியை எடுத்துக் கொண்டு திருப்புவதற்கும், கிருஷ்ணன் அந்த ஜன்னல் வழியாய் உள்ளே  நுழைவதற்கும் சரியாக இருந்தது ...

" ஆ ஆஆ ....." என்று அவள் அலறுவாள் என்று எண்ணியவன் அவள் மிளகாய் போடி வீசப்போவதை உணர்ந்து விலகி

" ஆஅ ஆஅ " என்று அலறினான் ...

" அச்சோ கிருஷ்ணா நீங்களா? சாரி எனக்கு நீங்கன்னு தெரியாது "

" உண்மைய சொல்லு .. நான்னு தெரிஞ்சிருந்த  எசிட் எடுத்து ஊத்திருப்பே தானே நீ " என்று கண்களை உருட்டியபடி அவன் கேட்கவும் அவள் கலகலவென சிரித்தாள்  ...உள்ளூர அவளின் புன்னகையில் கிறங்கியவன், போலியாய்

" என்னடி இளிப்பு ? எல்லாம் என் நேரம்  " என்றான் ...

" அது இருக்கட்டும் ... இந்த நேரத்துல என் ரூம்ல உங்களுக்கு என்ன வேலை ? நமகின்னும் கல்யாணம் ஆகலை ஞாபகம் இருக்கா ? கல்யாண வயசுல தங்கச்சியை வெச்சுகிட்டு நீங்க இப்படி அழிச்சாட்டியம் பண்ணுறிங்களே! "

" பேசி முடிச்சிட்டியா ? அது எப்படி எப்படி ? நமக்கு கல்யாணம் ஆகலையாம் ஆனா மேடம் மட்டும் பொறுப்புள்ள அண்ணியாக பேசுவாங்கலாம் ... என்னமோ நான் உன்னை இப்படி கட்டியணைக்க வந்த மாதிரி ரொம்பதான் கேள்வி கேக்குற ? " என்றவன் அவளை தன்னோடு இறுக்கி கொண்டான் ..

" அச்சோ விடுங்க கிருஷ் ..... "

" ம்ம்ம் முடியாது "

" நான் கத்திடுவேன் "

" கத்து .. ஆகாஷ்- சுப்ரி முன்னாடி நம்ம கல்யாணம் நடக்கும் "

" ஐயோ நெனப்புதான் உங்களுக்கு .... முதல்ல விடுங்க .. இப்போ எதுக்கு வந்திங்க சொல்லுங்க" என்றவள் அவனின் பிடியில் திமிறி கொண்டிருந்தாள்... மெல்ல அவளை விடுவித்தவன், கட்டிலில் அமர்ந்தது

" உனக்கு ஒரு சர்ப்ரைஸ் காட்ட போறேன் ... இங்க வந்து உட்கார் " என்று அவளை அமர சொன்னான்...

அவனை செல்லமாய் முறைத்தவள் அவனருகில் அமர்ந்தாள்....

" ம்ம்ம் இங்க பாரேன் "

விழிகள் விரிய அந்த படங்களை பார்த்தாள் மீரா... அது அவளின் சிறு வயது போட்டோ .. அவளின் தாய் தந்தையுடன், சூர்யா பிரகாஷ், சந்திர பிரகாஷ் அனைவரும் இருந்தனர் .. அவளுக்கு அப்போது மூன்று வயது இருந்திருக்கலாம்... இன்னொரு படத்தில் அவளுக்கு ஒரு சிறுவன் லட்டுவை ஊட்டிவிட , அவள் வாயை தவிர தரை எல்லாம் லட்டு கொட்டி கிடந்தது ..அதையும் ரசித்து அழகை படமெடுத்திருந்தார்கள் போலும்... இந்த படங்களை அவளும் சில வருடங்கள் முன்பு பார்த்திருக்கிறாள்..ஆனால் அப்போது அவளுக்கு கிருஷ்ணனை தெரியாதே ! அப்படி என்றால் அந்தநாள்தான் நித்யா ஆகாஷ், கிருஷ்ணனின் போட்டோ காட்டியபோது, கிருஷ்ணனை பார்த்தவளுக்கு அவன் மிகவும் பரிட்ச்ச்சயமானவன் என்ற உணர்வு வந்ததோ ... ?? என்றால் ஆம்... சிந்தி சிதறி தன பிஞ்சு கரங்களால் அவளுக்கு லட்டு ஊட்டி கொண்டிருந்தது நம் கிருஷ்ணநேதான்!!

" கிருஷ் .... நம்ம ரெண்டு குடும்பமும்... அப்போவே ? இது நீங்க தானே ??  "

" ம்ம்ம்ம் எஸ் நானேதான் ... நம்ம ரெண்டு குடும்பமும் அப்போ ஒற்றுமையா இருந்ததா அப்பா சொன்னாரு .. அன்னைக்கு நீ ஆபீஸ் போனபோது, அம்மா அப்பா எல்லாரும் பழைய போட்டோ பார்க்கும்போதுதான் சொன்னங்க.. நம்ம ரெண்டு பேருடைய அப்பாவும் பிசினஸ் பார்ட்னர்ஸ் மட்டும் இல்ல.. பெஸ்ட் பிரண்ட்ஸ்... இது உன்னுடைய காதணி விழா... ஒருவேளை சில மனஸ்தாபங்களில் நாம பிரியாமல் இருந்திருந்தால், நமக்கு அர்ரெஞ் மேரேஜ் நடந்திருக்குமாம் .. ஆனா இப்போ பார்த்தியா ? கடவுளே நம்மளை சேர்த்து வெச்சிட்டாரு .... சோ இந்த கல்யாணம் என் அம்மா அப்பா மட்டும் இல்ல மீரூ ... உன் அம்மா அப்பாவுக்கும் மனசுக்கு பிடிச்ச மாதிரிதான்  நடக்க போகுது .."

சொல்ல வார்த்தைகள் இன்றி அவன் மார்பில் தஞ்சம் அடைந்தாள் மீரா... " அம்மா அப்பா இருந்திருந்தா நல்ல இருக்கும்ல கிருஷ் .. அப்பா, அம்மா உயிரோட இருந்தபோது என்மேல உயிரா இருந்தாரு கிருஷ் .. ஆனா அம்மா போன பிறகு என்னை சுத்தமா  மறந்துட்டாரு ... பட் உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா ? என்னால இப்பவும் கூட அவரை வெறுக்கவே முடில .. "

" ஏன்  வெறுக்கணும் கண்ணம்மா ? "

" கிருஷ் ... ?? "

" யோசிச்சு பாரு .,.. ஒருவேளை நான் செத்து போய்ட்டா ?? "

" கிருஷ் !!!!!!!!! "

" ஒரு  பேச்சுக்குதாண்டா ...ஒருவேளை நான் இல்லாம போய்ட்டா நீ என்னையே நெனச்சுட்டு இருப்பிய ? இல்ல நம்ம குடும்பத்தோடு சந்தோஷமா இருப்பியா ? "

" உங்களை நெனச்சு துடிச்சிருப்பேன் கிருஷ் "

" ஏன் ? "

" ஏன்னா .. அவங்க மேல வெச்சுருக்குற பாசம் விட உங்க மேல உள்ள காதல் பெருசு ... உங்க மேல நான் உயிரையே வெச்சுருக்குறேன்"

" அப்போ உன் அப்பாவும் அதே மாதிரி இருக்குறது தப்பா டா ? "

" ... "

" உன் அம்மாவின் பிரிவை தாங்க முடியாமல் அவர் பிசினஸை பார்த்தாரே தவிர இன்னொரு பெண்ணை கல்யாணம் பண்ணிகலையே "

" .. "

" ஒரு வகையில் அதுவே உனக்கொரு நல்லதுதானே .. நினைச்சு பாரு .. அவரு சித்தின்னு சொல்லி யாரையாவது கூடிட்டு  வந்திருந்தா ? "

" கிருஷ் "

" மனுஷங்க எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க கண்ணம்மா... சிலர் அன்பை செயலில் காட்டுவாங்க, சிலர் கோபத்தில் காட்டுவாங்க, சிலர் வார்த்தையில் காட்டுவாங்க , சிலர் மௌனத்தில் காட்டுவாங்க .. உன் அப்பா மௌனத்தில் காட்டினாரு .. ஏன் நீயே உன் அப்பா மாதிரி தானே டா ..  "

" நானா ? "

" ஆமா என் மீது அளவு கடந்த காதல் இருந்தும் நீ மறைச்சு வாழலையா ? "

" உண்மைதான் கிருஷ்ணா " என்றவன் அவன் முகத்தையே கூர்ந்து நோக்கினாள்...

" என்னம்மா "

" அப்போ ... அப்போ நான் தப்பு பண்ணிட்டேனா கிருஷ்ணா ? கடைசி வரை அப்பாகிட்ட நான் சரியா பேசலையே ... அவரு ஆத்மாவை நான் கஷ்டப்படுத்த்திட்டேனா? " என்றவள் மீண்டும் அழ

" ஹே கண்ணம்மா .. உன் அப்பா பக்கம் ஒரு விஷயம் தப்பிலைன்னு சொன்னேன்.. அதற்காக உன் பக்கம் தப்புன்னு சொன்னேனா ? "

" புரியலை...."

" மக்கு மக்கு ... நீ அப்போ சின்ன பொண்ணு .. என்னதான் தன் மனைவி மேல அன்பு இருந்தாலும் நீயும் அவர்களின் உயிர்தானே .. அவர்களின் காதலில் பிரதிபலன் தானே உன் உயிர் ... அப்படி  நினைச்சாவது அவர் உன்னை பார்த்திருக்கணும் .. பொதுவாகவே பெண் பிள்ளைக்கு அப்பான்னா உயிர் .. அப்போ நீ உன் அப்பாவுக்காக எவ்வளவு ஏங்கி இருப்ப ? "

" ..."

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.