(Reading time: 42 - 84 minutes)

 

" ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் ரிலாக்ஸ் சுபி ... சரியாய் போச்சு .. ஒண்ணுமில்ல ஒண்ணுமில்ல " என்று சிறுபிள்ளைக்கு சொல்வதைபோல் ஆதரவாக தட்டி கொடுத்தான்.

" குட்டிமா, நீ ஏன் பொய் சொன்னனு எனக்கு தெரியும் ... நான் கூடத்தான் உன்கிட்ட பொய் சொல்லி  இருக்கேன் "

" நீங்களா ? " என்று விழி விரிய கேட்டவளின் நெற்றியில் இதழ் பதித்தான்.

" ம்ம்ம் ஆமா... நாம ஊடல்ல இருக்கும்போது, பசிச்சா சாப்பிட்டுருவேன் ...பட் நீ சாப்பிட்டிங்கலான்னு கேட்டா இல்லன்னு சோகமா சொல்லுவேன் ..." என்று கண்ணடித்தான் .....

" அட திருடா .... ஏன் அப்படி ? "

" அப்போதான் நீ என் மேல பாவபட்டு சமாதனம் ஆகுவ .. அதே மாதிரி "

" அதே மாதிரி ??? "

" ரொம்ப வேலை பிசியா இருக்கும்போது சாப்பிட்டிருக்க மாட்டேன் ... பட் நீ வருத்தப்படுவியேன்னு சாப்ட்டேன் நு சொல்லுவேன் "

" ஓஹோ எனக்கு தெரியாமல் இதெல்லாம் நடக்குதா ? " என்றவள் நம்பியாரை போல கைகளை தேய்த்து கொள்ள

" குட்டிமா நோ .. எதுவா இருந்தாலும் பேச்சு பேச்சாவே இருக்கணும் ..." என்று போலியாய் பயந்தான் அர்ஜுனன் ..

" அப்படியா அப்போ தள்ளி உட்காருங்க "

" ஏனாம்"

" ஆமா நீங்க தானே பேச்சு பேச்சா இருக்கணும்னு சொன்னிங்க ....? உங்க கையும் கண்ணும் சும்மாவா இருக்கு ? " என்றவன் அவள் இடையில் தாளம்போட்டு  கொண்டிருந்த அவனின் கரத்தைப்பார்த்தாள்....

" சரி சரி .... கூல் ... நான் சொல்ல வந்ததை முடிச்சிடுறேன் .... "

" ம்ம் அந்த பயம் இருக்கணும் "

"  அடிப்பாவி .. எல்லாம் என் நேரமடி .............. இது பாரு கண்மணி சில குட்டி குட்டி காரணங்களுக்காக பொய் சொல்றது தப்பில்லை .. நான் உன்னைவிட்டு  தூரமா இருக்கும்போது உனக்கு உடம்பு சரி இல்லன்னு சொன்னா நான் வருத்தப்படுவேன் ... அதை நெனச்சுதான் நீ என் கிட்ட பொய் சொன்னன்னு தெரியும் .. அதுனாலதான் எனக்கு எந்த கோவமும் வரல .. பட் "

" சொல்லுங்க அர்ஜுன் "

" நான் உன் பக்கத்துல இல்லாத நேரம் நீதானேடா உன்னை பார்த்துக்கணும் .... உனக்கு ஒண்ணுன்னா என்னால தாங்க முடியுமா சொல்லு ? "

" முடியாதுதான் அர்ஜுன் ... நீங்க எவ்வளோ தன்மையா சொல்றிங்க? ஆனா இந்த கீதா என்னை திட்டி தீர்த்துட்டா ... பட் அதுவும் நல்லதுதானே இல்லன்னா நான் உங்க நிலையை யோசிச்சிருப்பேனா ? "

" ஓகே ஓகே இளவரசி இதுக்கு மேல இதை பத்தி பேச வேணாம் .... இது உன் யுவராஜனின்  ஆணை .. "

" கடைசியா ஒரே ஒரு கேள்வி யுவராஜரே "

" சரி கேளுங்க இளவரசியே "

" காருல என்ன நடந்துச்சு ? எப்படி நான் இங்க வந்தேன் ? "

" அதுவா ? " என்றவன் நடந்ததை சொல்ல ஆரம்பித்தான் ... வாங்க நாமளும் கதை கேட்போம் ....

சுபத்ராவின் கைப்பிடித்து  காரில் ஏற்றிய அர்ஜுனை கோபமாய் காரை எடுத்தான் ...

பயம், காய்ச்சல், நடுக்கம் என்று இருந்தவளுக்கு அவனின் கோபம் இன்னும் கலக்கத்தை தர " அஜ்ஜு " என்று அழைத்தாள்....அவ்வளவுதான் .... !

அனலாய் தகித்த அவன் மனம் அடங்கிவிட்டது ... " ஐயோ என்னவள் பயந்து விட்டாளே " என்று பரிதவித்தவன் சடன் ப்ரேக் போட்டு காரை நிறுத்தினான் ...

" குட்டிமா "

"ம்ம்ம் "

" உடம்புக்கு என்ன பண்ணுதுடா ? "

" ம்ம்ம் அஜ்ஜு ..... " என்று அரற்றியவள் அவன் தோளிலே சாய்ந்து கண்மூடினாள்... அவளின் பாதங்களை  மடியில் ஏந்தி சூடாய் தேய்த்து கதகதப்பு மூட்டியும் கைகளுக்கு  கதகதப்பு மூட்டியும் அவளிடம் மாற்றமில்லை ...அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல்  மிக அருகில் இருந்ததினால், உடனே   அவளின் நண்பர்களிடமும் கிருஷ்ணனிடமும் தகவல் சொல்லிவிட்டு அவளை தனதறைக்கு அழைத்து சென்று, டாக்டரையும் வரவழைத்தான் ...

அர்ஜுனன் சொன்னதை கேட்ட சுபத்ரா " என்னால எவ்வளோ கஷ்டம் செல்லம் உங்களுக்கு " என்று அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்....

" ச்ச ச்ச இல்ல குட்டிமா... நீ என்னை செல்லம்னு சொல்றதும் , இப்படி என்மேல சாய்ஞ்சுகிட்டு செல்லம் கொஞ்சுறதும் நான் கஷ்டம்னு சொல்வேனா ? " என்று அர்ஜுன் கண் சிமிட்டவும், கார்த்திக் கதவை தட்டவும் சரியாக இருந்தது ...

" உள்ள வா கார்த்திக் "

" இல்ல இருக்கட்டும் பாஸ் ... சுபா ?? "

" இப்போதான் எழுந்தா ...வா டா ....."

" வேணாம் பாஸ்..... சாப்டுடு தூங்குங்க நான் வரேன் "

" நீ சாப்பிட்டியா "

" ம்ம்ம்ம் "

" பொய் "

" இல்ல அது .....

என்ற கார்த்திக் சட்டென கண் கலங்கிவிட்டான்

" சாரி பாஸ்.... நான் கூப்பிடதுனாலதான் கீதா சுபாவை விட்டுட்டு வந்தா ...என்னாலத்தான் .... "

" அடடா ... டேய் இன்னும் எத்தனை பேரு டா என் கிட்ட சாரி கேக்க போறீங்க ? "

"..."

" இது பாரு கார்த்திக் ... நான் ஏதோ உள்ளனர்வில்தான் உங்களோடு வந்தேன் .. நீயே யோசிச்சு பாரு ..விதி என்னை சுபாகிட்ட இருந்து பிரிக்கணும்னு நெனைச்ச எனக்கு ஏன் இப்படி ஒரு சிக்னல் கிடைக்கணும் ? சோ நாங்க சேரனும் என்பது எழுதிவைக்கப்பட்டது ...... என்னை  மீறி சுபத்ராவுக்கு எதுவும் நடக்காது ...... ரிலாக்ஸ் டா .. உனக்கும் கீதாவுக்கும்  ஒரு சர்ப்ரைஸ் இருக்கு ...அதை நாளைக்கு சொல்லுறேன் .... இப்போ போய் சாப்ட்டுடு  தூங்கு .... குட் நைட் "

" குட் நைட் பாஸ் "

தே நேரம் சுபத்ரா தனது செல்போனில் அந்த பாடல் உயிர்பிக்க, அவர்களுக்காகவே எழுதியது போல ஒலித்தது அந்த பாடல் வரிகள் ...

உசிர் என்னோடு இருக்கையிலே

நீ மண்ணோடு போவதெங்கே ?

அட உன் ஜீவனில் நானில்லையா?

கொல்ல வந்த மரணம் கூட குழம்பும் அய்யா !

அந்த வரிகளை கேட்ட சுபி  ஓடி வந்து அர்ஜுனனை கட்டி கொண்டாள்..... ( ஒரு வழியா அர்ஜுனின் கனவிற்கு முற்றுபுள்ளி வெச்சாச்சு .. இப்போ எல்லாரும் சந்தோஷமா ஒரு பெருமூச்சை விட்டு கொங்க ...அடுத்து இந்த பக்கம் நடந்த பூகம்பத்தை பார்க்கணும் ... அப்போ நம்ம அடுத்த கட்ட திட்டம் என்ன ? அதே அதே! உடனே உங்க கடிகாரத்தை ரிவர்ஸ்ல திருப்பி, அந்த கடுவன் பூனை சிவா ஐ பி எஸ் போன பிறகு அர்ஜுன்  வீட்டுல்ல என்ன நடந்துச்சுன்னு  பார்ப்போம் வாங்க )

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.