(Reading time: 42 - 84 minutes)

 

" ன் லைப் ஏ நீதானே மா " என்று தீர்க்கமாய் சொன்னான் ரகுராம் ....

" உன்னை என்னத்தான் செய்வது ? " என்பது போல பார்த்தாள் ஜானகி ....

" கொட்டிடுங்க ரகு ... உங்க மனசுல இருக்குற காதல், கவலை எல்லாத்தையும் கொட்டிடுங்க ...ஒரு காதலியாய் என்னால கேட்க முடியாது ... ஆனா என் தோழனின் துயரை என்னால் தாங்க முடியும்  " என்று அவனை பார்த்து உரைத்தாள்....

அவளையே பார்த்த ரகுராமின் இதழ்கள் ஏதும் உரைக்கவிடினும் அவன் மனம் பேசியது .. சந்தோஷத்தில் பேசியது ... நிம்மதியில் துள்ளியது .... ( அப்படி என்ன அவன் மனது சொன்னிச்சு ... வாங்க கேட்ப்போம் )

" எனக்காக ஏன் வருந்துகிறாய் ?? நீ என் தோழிதான் என்றால் தோழியாய் நீ ஏன் என்னை கண்டிக்கவில்லை ? கல்லாய்  இருந்த உன் மனம் உருகுவதாய் சொன்னாயே? அது பரிதபத்திலா அல்லது காதலிலா ? உனக்காக நான் செய்தததை பட்டியளிட்டவளே ...எனக்காக நீ என்னென செய்கிறாய்  என்று சொல்லவா ? இந்த உலகத்தின் அத்தனை துயரத்தை ஏந்தி நிற்பவனிடம் உன் சோகத்தை சொல் நான் தாங்கி கொள்கிறேன் என்கிறாயே இதைவிட பெரிதாய் என்ன  செய்து விட முடியும் ?என் மீது காதல் இல்லாமலா உன் மனமானது என் வசம் சாய்கிறது ? என் மீது காதல் இல்லாமலா உன் இதயம் எனக்காக துடிக்கிறது ? என் மீது காதல் இல்லாமலா என்னை நிழலாய் தொடர்கிறாய் ? என் மீது காதல் இல்லாமலா அன்று என் வரவை எதிர்பார்த்து காத்திருந்தாய்  ? என் மீது காதல் இல்லாமலா உன் விழிகள் என்னை கண்டதும் ஆதவனை கண்ட தாமரையாய் மலர்கிறது ? என் மேல் காதல் இல்லாமலா இத்தனை நாட்கள் பொறுமை காத்தாய் ..? என்றோ உன் மனம் என் வசம் சாய்ந்து விட்டதடி .. அதை அறிந்து கொள்ளத்தான் உன்னால் முடியவில்லை ... என் காதல் தெரியாத போதே உன்னை நிழலாய் தொடர்ந்தவன் நான் .. இன்று உன் மனம் என் வசம் இருப்பதை அறிந்தப்பின் இனி எனக்கு சொல்வதற்கு வார்த்தையேது ? பிரிவதற்கு பாதையும் தான் ஏது...? காத்திருக்கிறேன் உயிரே .. உன் மனம் மாறும் இனிய நாளுக்காக காத்திருக்கிறேன் .... ஜானகியே என்னுயிர் சகியே , உன் இதயம் தொட்ட காதல் உன் இதழால் நீயே சொல்வாய் ... நட்பு எனும் திரையில் உன் காதல் ஒளிந்துள்ளதடி பெண்ணே... சீக்கிரம் அத்திரையை கண்டுபிடித்து நீக்கிவிடு ... அதுவரை காத்திருக்கிறேன் உன் ரகு "ராம் " ............ "

" பேசுங்க ரகு "

" என்ன பேச ஜானகி ? "

" ... "

" என் காதலை உன்கிட்ட தெரியபடுத்தனும்னு நெனச்சேன் .. ஆனா அது உனக்கே தெரிஞ்சிருக்கு ... வேறென்ன வேணும் எனக்கு ? இந்த உலகத்துலேயே இருவருக்கு மட்டும்தான் நான் உன்னை எவ்வளவு காதலிக்கிறேன்னு தெரியும் .... முதலாவது நான் .. இரண்டாவது நீ .. "

" ... "

" நீ சொன்ன மாதிரி ஒரு தோழியாய் உன்னை பாவிச்சு நான் எந்த அளவிற்கு காதலிக்கிறேன்னு உன்கிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன் மா ... ஒவ்வொரு நாளும் நான் பீல் பண்ணதை  என் பக்கம் இருந்து பார்த்தவள் நீதானே? "

"ம்ம்ம் "

" இன்னைக்கு உன்னிடம் பேசணும்னு சொன்னதே அந்த பெண் நீ தான்  என்பதை  தெரியபடுத்துறதுக்கும்... நாம திருமணம் பண்ணிக்காலமான்னு  கேட்பதற்கும் தான் .. !! "

" ரகு??? !!!!!!! "

" இரும்மா.. நீதானே மனசுல உள்ளதை சொல்ல சொன்ன? இரு நான் பேசி முடிச்சிடுறேன் " என்றவனின் குரலில் ஆனந்தம் இருந்ததை ஜானகி உணர்ந்தாளோ தெரியவில்லை .. நீங்க உணர்ந்திங்களா??

" ஜானகி..... நான் உன்னை காதலிச்சதும் காதலிக்கிறதும் உண்மை .. ஆனா நான் சொன்னது மாதிரி என் காதலை விட உன் உணர்வுகள் எனக்கு முக்கியம் ... உன்னை கட்டாயப்படுத்தி காதலிக்கவோ அல்லது உன் இரக்கத்தை சாதகமாய் பயன் படுத்தவோ எனக்கு இஸ்டமில்லை ... சோ என் காதல், அந்த வலி தனிமை ,..இதையெல்லாம் விட்டுடு என்னை ஒரு நண்பனாக நெனைச்சு எனக்கு சில கேள்விகளுக்கு பதில் சொல்லு "

" ம்ம்ம்ம்ம் சரி "

" ஒரு நண்பனாக நான் உன் எதிர்காலத்தை பத்தி  யோசிறது தப்பா ? "

" இல்லை "

" அப்படி யோசிக்கும்போது , உனக்கு எது சரி தப்புன்னு முடிவெடுத்து கைட் பண்றது தப்பா? "

" வற்புருத்தாதவரை தப்பில்லை "

" அடடே ரொம்ப தெளிவுதான் " என்று மனதிற்குள் மெச்சினவன்

" பட் நீ நோ சொல்றதுக்கான  காரணம் எனக்கு சரியா படாதபோது, உன்னை கேள்வி கேட்பதும் , என்னுடைய கருத்துகளை சொல்வதிலும் தப்பிருக்கா ? "

அவனின் வாதிடும் திறனை ரசித்தவள்

" தப்பில்லைதான் " என்றாள்.....

" அப்போ என் மனசில உள்ளதை இப்போ சொல்லுறேன் " என்றவன் அவள் எதிர்பாராதபோது அவளின் வலது  கரத்தை தன் கரங்களுக்குள் புதைத்து

" ஜானகி நீ என்னை காதலிக்க வேணாம் பட் நாம கல்யாணம் பண்ணிக்கலாம் " என்றான்.... அவன் சட்டென  தன் கரத்தை பற்றுவான் என  அவள் எதிர்ப்பார்க்கவில்லை , மேலும் அவள் விழியோடு விழி கலந்து என்னை மணந்து கொள் என்று அவன் சொல்லவும் ஜானகி அதிர்ந்தே விட்டாள்....

" என்ன ரகு உளறுறிங்க?"

" உளறல் இல்ல ஜானு .. உண்மை "

" என்ன உண்மை ? "

" உன் மீது கொண்ட காதல் உண்மை .. அதை விட நான் கொண்டுள்ள ஆழமான நட்பு உண்மை .. உன்னை மறக்க முடியாது என்பதும் உண்மை .. என் கை திருமாங்கல்யம் ஏந்தினால் அது ஜானகியின் கழுத்துகுதான் என்பதும் உண்மை ... "

" ரகு ... இது சரி இல்லை "

" எது சரி இல்லை .. நான் என்ன என்னை காதலின்னா சொன்னேன்? கல்யாணம் பண்ணிக்கோன்னு தானே சொல்றேன் ? "

" காதல் இல்லாமல் கல்யாணம் எதற்கு ... ? "

" உண்மையா உனக்கு பதில் தெரியலையா ? "

" தெரியலை சொல்லுங்க "

ஒரு நெடிய பெருமூச்சு விட்டவன், கனிவான குரலில் பேச ஆரம்பித்தான்....

" ஜானகி உனக்கு என் மேல காதல் இல்லாமல் இருக்கலாம்... ஆனா நல்ல நட்பு இருக்கு  தானே ? என் கண்ணியம் மேல உனக்கு நம்பிக்கை இருக்கு தானே ? "

" ம்ம்ம் இருக்கு "

" அப்பறம் என்னடா ? வருங்காலத்தை நினைச்சு பார்த்தியா ? இது நம்ம இளமைகாலம் .. நமக்குன்னு ஒரு துணை தேவை இல்லைன்னு முடிவெடுத்து வாழ முடியும்... ஒரு 40 வர்ஷம் கழிச்சு யோசிச்சு பாரு .. கன்னம் சுருங்கி, கைகள் தழுதழுத்து , முதுமை எய்திய வயதில்  ஒரு மனுஷனுக்கு தேவை நல்ல ஆதரவு தான் ..... அந்த காலகட்டத்துல ஒரு காதலனாக உன்னை நெஞ்சோடு அணைத்து ஆறுதல் சொல்ல முடியலைன்னாலும், தோளோடு சாய்த்து ஆதரவாக இருக்க நண்பனாக  உனக்கு  நான் வேண்டாமா  ? என் கடைசி மூச்சு வரைநான்  உன்னோடு இருக்கணும் ஜானகி "

" என்ன பேச்சு  இது ரகு ? "

" இதுதான் உண்மையான பேச்சு ஜானகி.. இதுதான் எதார்த்தம்... அர்ஜுன் சுபிக்கு கல்யாணம் ஆகிடும் ... பானு அத்தைக்கு வயசாகுது ..  அதுக்கு பிறகு உன்னை சுத்தி உறவுகள் இருந்தாலுமே உனக்கு மட்டும்னு யாரு இருப்பாங்க சொல்லூ ? என்னாலையும் வேறொரு பெண்ணை விரும்ப முடியாது !!! எனக்கு நீ உனக்கு நான்னு  நாம நண்பர்களா, கணவன் மனைவியா வாழ முடியுமே "

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.