(Reading time: 42 - 84 minutes)

 

" ந்த வயசு கூட பரவாயில்லை ... உன்னுடைய டினேஜ் நெனைச்சு பார்த்திருப்பாரா ? அடிப்படையில் நீ நல்லபொண்ணு .. சோ அந்த தனிமையும் சூழ்நிலையும் உன்னை தவறான பாதைக்கு இழுத்துட்டு போகலை.. ஒருவேளை உனக்கு கூடாநட்பு கிடைச்சிருந்தா ? உன் லைப் என்ன ஆகிருக்கும் ? பிள்ளைங்களுக்கு பெற்றோரை பார்க்குற கடமை இருக்கும்போது ..பெத்தவங்களுக்கும்  அப்படிதானே ? அந்த விஷயத்தில் மாமா மேல தப்பு இருக்கு "

" எப்படி கண்ணா, எல்லாரையும் சமமாக பார்குறிங்க? " என்று புன்னகைத்தவளை பார்த்து வசீகரமாய் சிரித்து வைத்தான்....

" ஏன்னா நான் கிருஷ்ணன் டீ " என்றான் ...

" அய்யே ரொம்பதான்.. என்ன மகாபாரதம் பார்த்திங்களோ "

" ஆமா அதுகூட நல்ல போதனைதானே... கிருஷ்ணன் தர்மம் வழி பாண்டவர்களுக்கு துணையாக இருந்தாலும் கௌரவர்களை ஒதுக்கி வைக்கலையே ... சகுனி உட்பட அனைவருகிட்டையுமே  பல நேரங்களில் தன்மையுடன் நடந்துக்கிட்டார்... அதை விடு .. உங்களுக்கு அர்ஜுனன் - கிருஷ்ணன் நட்பை பிடிக்குமா ? அல்லது துரியோதனன்- கர்ணன் பிடிக்குமான்னு மத்தவங்களை கேளேன் .. பெரும்பாலோர் துரியோதனன் -கர்னன்னு சொல்வாங்க .. அதாவது கெட்டவங்க கிட்டயும் நல்ல குணங்கள் இருக்குன்னு போதிக்கிறாங்க .. கடவுள் வாழ்ந்த அந்த காலமே அப்படினா ..இப்போ சொல்லவா வேணும் ? அதுக்காக நான் கடவுள் இல்லை .. பட் சில நேரம் மத்தவங்க கண்ணுக்கு தப்பாக தெரிபவனிடமும் நல்லது இருக்கன்னு தேடணும்னு  சொல்றேன் .. புரிஞ்சதா செல்லம் "

" ம்ம்ம்ம் " என ஆமோதித்து அவள் சிரிக்க, அவளை கன்னத்தை பிடித்து ஆட்டி

" சோ ச்வீட் மை பப்ளி " என்றான்....

அவளோ அவனுக்காக மெல்லிய குரலில் பாடினாள்..

நன்றி சொல்லவே உனக்கு

என் மன்னவா வார்த்தை இல்லையே

தெய்வம் என்பதே எனக்கு

நீயல்லவா ? வேறு இல்லையே ?

பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்

பூ முடிக்க  யாருமின்றி கன்னி இருந்தேன் ..

சொந்தம் இன்றி பந்தம் இன்றி நானும் இருந்தேன்

மொட்டு ஒன்றை தொட்டு விட்டு பூவை அடைந்தேன்

அதே இரவு நேரம் பாதி உறக்கத்தில்,

" வந்துரு கார்த்தி..... என் கிட்ட வந்திடு .... என்னை மன்னிச்சிரு கார்த்தி .... எனக்கு தனியா இருக்க முடிலடா வந்திடு " என்று விசும்பினாள் நித்யா... அவள் இங்கு விசும்ப அவளின் கார்த்தி யும் அங்கும் உறங்காமல் இருந்தான் ....( யார் இந்த கார்த்தி? ? )

இந்த ட்விஸ்ட் வெச்சிடு நான் எபிசொட் முடிக்கலாம் நெனச்சேன் .. பட் தீபாவளி வருது .. நம்ம chillzee members அனைவருமே கலகலன்னு இருக்கீங்க ...சோ ஒரு சோகமான எபிசொட் கொடுத்து விடை பெறுவதற்கு மனசு இல்ல... அதனால், ஒரு வாரம் கழித்து என்ன நடந்துச்சுன்னு சொல்லுறேன் .. அந்த ஒரு வாரத்தின் கலவரத்தை அடுத்த எபிசொட்   டென்ஷன் இல்லாமல் முறுக்கு சாப்பிட்டு கிட்டே படிங்க... )

ஆக... ஒரு வாரம் கழித்து,

" ஹே நம்ம நித்யாவா இது ? "

" ஆமா அண்ணா ...நான் எப்படி இருக்கேன் ? "

" உனக்கென செல்லம் அழகா இருக்கே "

" டேய் ... சுப்ரியை அலங்காரம் பண்ண சொன்னா இந்த குரங்கு அலங்காரம் பண்ணிட்டு வரா... நீயும் அவளை பாராட்டுறியே கிருஷ் " என்று நண்பன் முதுகில் இரண்டடி வைத்தான் ஆகாஷ்....

" ஹே கல்யாண  மாப்பிளை, என் அண்ணியை அவங்க அம்மாவே அலங்காரம் பண்ணி கூட்டிடு வாராங்களாம்..." -நித்யா

" என்னது அத்தையா ? என்னாலே நம்பவே முடில .. அவங்க எங்களை ஏத்துப்பங்கன்னு நினைக்கவே இல்ல  " என்று ஆகாஷ் கண்கலங்க,

" அய்யே நீ ஏற்கனவே சுமார் மூஞ்சி குமார்தான் .. இதுல அழுது வடியாத .. அப்பறம் சுப்ரியா கல்யாண மேடையில் நான் காதலில் தடுக்கி விழுந்ததற்கு காரணமான ரோமியோ நீ இல்லைன்னு சொல்லிட போறாங்க "

" அடி கழுதை " என்று ஆகாஷ் நித்யாவை துரத்த, அவனிடமிருந்து ஓட்டம் பிடித்த நித்யா  ஒரு சிறுவனை மோதி நின்றாள்..

" சாரி குட்டி "

" நான் குட்டி இல்லை .. என் பேரு கார்த்தி"

" ஓஹோ மன்னிச்சிருங்க கார்த்தி " என்று அவனை தூக்கி கொஞ்சியவள் , " என்னமோ நீ என்னை தேடி வர்ற மாதிரி இருக்கு கார்த்தி "

என முணுமுணுத்தாள்...

ஹோட்டலில்,

" அப்பா, நீங்க நம்ம பெரியவங்களை கூட்டிகிட்டு ஆகாஷ் வீட்டுக்கு வந்திடுங்க "

" அப்போ ஜானகி ?? " என்று சந்திரப்ரகாஷ் கேட்க,

" சித்தப்பா, சின்னஞ்சிறுசுங்க நாங்க தனியா வரோமே " என்றான் ரகுராம் ..

" டேய் ... இப்படி எல்லாரையும் என் வண்டியில் ஏற சொன்னா உன் அம்மாவை நான் எப்படி சைட் அடிப்பேன்" என்று சூர்யா வார,

" இதுக்குத்தான் ஹோட்டலில் தங்காமல், ஆகாஷ் வீட்டுலேயே இருக்கலாம்னு சொன்னேன் .. கேட்டிங்களா நீங்க ? இப்போ நீங்களாச்சு ...உங்க லவ்வாச்சு ...நீ வா சகி நாம போவோம் " என்றவன் வெட்கத்தில் முகம் ரத்தமாய் சிவந்து நிற்பவளை கை பிடித்து கொண்டு காரில் ஏறி அமர்ந்தான்.... ( எஸ் ... அவங்க எல்லாரும் ஊட்டிக்கு ஜோடியாக வந்தாச்சு )

" என்ன பார்வை ? இந்த பார்வை ? " என்று ரகுராம் கேட்க, அவன் தோளில் சாய்ந்தவள் ,

" லவ் பண்ணலாம் பட் இப்படி அராஜகம் பண்ண கூடாது ராம் ... அத்தை மாமா என்ன நெனச்சுபாங்க " என்றாள்...

" அவங்களை அவங்க பார்த்துக்கட்டும் .. இப்போதைக்கு நீ என்னை நினை நான் உன்னை நினைக்கிறேன் " என்று அவன் சொல்லி காரை ஸ்டார்ட் செய்ய , அவர்களுக்காக ஒரு பாடலும் ஸ்டார்ட் ஆனது

ராமனின் மோகனம்

ஜானகி மந்திரம்

ராமாயணம் பாராயணம்

காதல் மங்களம்

தெய்வீகமே உறவு

" ஹேய் சுபி நில்லு .. என் முகத்துல மார்க் விழும் " என்று  அர்ஜுன் தடுத்தும், கேட்காமல் கைகளில் இருந்த மருதாணியால் அவன் முகத்தில் தேய்த்து சிரித்தாள் சுபத்ரா ...

" இனி என்னை தவிர யாரையாச்சும் சைட் அடிச்சிங்க, இந்த தடவை மருதாணி பூசினேன், அடுத்த தடவை நிலக்கரிதான் " என்று எச்சரித்துவிட்டு

சிட்டாய் பறந்தாள்....

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.