(Reading time: 51 - 102 minutes)

 

" ஹே வாலு ...டயர் பஞ்சர் ஆனதுல உனக்கு சந்தோஷமா ? அப்படியே நடந்தே போ ஊருக்குள்ள " என்றான் ரகுராம் ..

கிருஷ்ணன் " டேய் ரகு தங்கச்சியை ஏன் திட்டுற " என்றான் ..

" அதானே " என்று ஒத்துபாடினாள் ஜானகி ..

" சரி சரி .. சண்டை போடாதிங்க .... பெரியப்பா .. இது நம்ம ஊருதானே .. இங்க என்ன பயம் ? காரை இங்க பார்க் பண்ணிட்டு நாம நடந்தே போலாம் பெரியப்பா ... கிளைமேட் கூட ரொம்ப சூப்பரா இருக்கு என்றாள்...

அவள் ஆசைபட்டு அதை மறுக்க யாருக்குதான் மனம் வரும் ..எனினும் சிவகாமி " வயசு பொண்ணுகளை இப்படி ரோட்டுல நடத்தி கூட்டிட்டு வருணுமா ? " என்று ஆட்சேபித்தார்..  அபிராமியோ " விடு  சிவா .. நம்ம ஊருதானே ,... " என்று சொல்லி அவரை சம்மதிக்க வைத்தார் .. இப்படியாய் அனைவரும் நடக்க ஆரம்பித்தனர் .. கிராமத்திற்கு செல்ல விருப்பதால் நம் கதாநாயகர்கள் அனைவரும் வேஷ்டி சட்டை அணிந்திருக்க, ஜானகியும் மீறவும் புடவை கட்டியிருந்தனர் .. சுபத்ரா மட்டும் பாவாடை தாவணி அணிந்து நம்ம அர்ஜுனனை அசத்தி கொண்டு இருந்தாள்...

கிராமத்து மண் வாசம் அவர்களை கட்டி போட்டது .. இயற்கை காற்றை  சுவாசித்து கொண்டே பொறுமையாய் நடந்து  கொண்டு இருந்தனர் அனைவரும் .. சூர்யா பிரகாஷ் அபிராமியை முதன் முதலில் பார்த்த நிகழ்வுகளை எண்ணி பார்த்து அவ்வப்போது அதை பற்றி ரகசியமாய் பேசி அவரை முகம் சிவக்க வைத்தார் ..காதலர்களுக்கு வயதாகலாம்.. ஆனால் காதலுக்கு ? அவர் கண்கள் பொழிந்த காதல் மழையில் விரும்பியே நனைந்தார் அபிராமி ..

சந்துருவோ  சிவகாமியிடமும் பானுவிடமும்  சிறுவயதில் தான் செய்த சேஷ்டைகளை சொல்லி கொண்டு இருந்தார் .. " இங்கதான் நானும் அண்ணாவும் மாங்காய் பறிப்போம் .. ஸ்கூல் போகலன்னா அந்த கிணத்தடி பக்கம் தான் இருப்போம் " இப்படி ஒவ்வொரு நினைவுகாளையும் சுவையாய் உயிரோட்டத்துடன் சொல்லி கொண்டே வந்தார்..

நம்ம மீரா- கிருஷ்ணா, ரகுராம் - ஜானகி, அர்ஜுன் - சுபத்ரா மூவரும் வயல்வெளிகளும் தென்னந்தோப்புகளையும் ரசித்து பார்த்து பேசிக்கொண்டு இருந்தனர் .. அவப்போது ஒரு ரகசிய பார்வை பரிமாறிக் கொண்டே கைகள் உராய்வது போல அடிகடி இடித்து கொண்டு நடந்தனர் .. அவர்களின் சீண்டலை ரசித்துகொண்டே திட்டினர் பெண்கள் மூவரும் ..

அங்கே மாட்டு வண்டியில் சென்று கொண்டிருந்த சிலர் சூர்யாவையும் சந்துருவையும் பார்த்துவிட்டு இறங்கி வந்தனர் ... " நம்ம வேலு அய்யா பசங்க தானே ? "என்று முணுமுணுத்தப்படி அங்கு வந்தனர்..

" தம்பி……….. சூர்யா தம்பி தானே .. ? "

" அட மாரி அண்ணே , எப்படி இருக்கீங்க ? "

" எனக்கென்ன ராசா ? நம்ம பெரியய்யா புண்ணியத்துல ராசா மாதிரி இருக்கேன் .. இதான் நம்ம புள்ளைங்களா ? எம்புட்டு வளர்ந்துட்டுங்க... இவங்க ?? " என்று ஜானகி மீராவை பார்த்து அவர் கேட்க

" நம்ம வீட்டு  மஹா லட்சுமிங்க " என்றார் ...

" அடடே ... ரொம்ப சந்தோசம் ... ஏன் எல்லாரும் நடத்து வர்ரிங்க ... மாட்டு வண்டியில போலாம் "

" ஆமா ஆமா போலாம் பெரியப்பா " என்று ஆசையாய் குதித்தாள் சுபத்ரா...  அர்ஜுனன் அவளையே வைத்தகண் வாங்காமல் பார்த்தான் .. பின்ன முதல் தடவை நம்ம அம்மணி பாவாடை தாவணியில்  மயக்கும் தேவதையாய் இருந்தாங்க ...!

" சரி வாங்க " என்றதும் கிருஷ்ணன், ரகு, அர்ஜுன் மூவரும் பெரியவர்கள் வண்டியில் ஏற உதவினர் ... அந்த நேரம் தூரத்தில் இருந்து  வந்த ஒரு மாட்டு வண்டியில் இருந்த யாரோ மின்னல் வேகத்தில்  சுபத்ராவை கடத்தி சென்றனர் ..

" அஜ்ஜு " என்று அவள் கத்தும் சத்தம் அந்த இடத்தையே உலுக்க, ஒரு கணம் நடுங்கியவன், பக்கத்தில் இருந்த மாட்டு  வண்டியில் ஏறினான் ..

" தம்பி .. நான் ஓட்டுறேன் வாங்க ..."

" இல்ல நான் போறேன் "

" என் மேல நம்பிக்கை இல்லையா? "

" அய்யா...உங்களுக்கு இருக்குறது உங்க பெரியய்யா வின்  வீட்டு பெண்ணை காப்பாத்தனும்னு வேகம் .. ஆனா எனக்கு என் உயிரை காபத்தனும்னு வெறி .. நானே பார்த்துக்குறேன் "

" டேய்  அர்ஜுன் , உனக்கு மாட்டு வண்டி எப்டிடா ? " என்று கிருஷ்ணன் ஆரம்பிக்குமுன்னே அவன் கையில் இருந்த சவுக்கை அடித்து வேகமாய் வண்டியை செலுத்தினான்...

" அர்ஜுன் கு மாட்டு வண்டி ஓட்ட தெரியும் கிருஷ்ணா " என்றார் பானு

" எப்படி அத்தை? "

" அவனுக்கு கிராமத்து வாழ்க்கை ரொம்ப பிடிக்கும் .. காலேஜ் படிக்கும்போது மெனெஜ்மண்ட் ல பேசி அவங்க ப்ரண்ட்ஸ் எல்லாரும் கிராமத்துக்கு டூர் போனாங்க... அதுவும் இல்லாம அவன்  சின்ன வயசுல, எல்லாரும் கிராமத்துல தானே இருந்தோம் "என்றார் நிம்மதியாய் .. என்னதான் அவர் அபப்டி சொன்னாலும் மற்றவர்களின் பதட்டம் குறையவே இல்லை .. சூர்யா அவரின் தந்தை வேலுச்சாமியை போனில் அழைக்க, அவரு போன் எடுக்கவில்லை ..

தன் முன்னே சென்று கொண்டிருந்த வண்டிக்கு ஈடுகொடுத்து வேகமாய் வந்தான் அர்ஜுனன் .. முன்னால் சென்ற வண்டி  அரைவட்டமாய் சுற்றி அவன் எதிரில் நிற்க, கையில் சவுக்குடன் ரௌதிரமாய் நின்றான் அர்ஜுனன் ..

கண்களில் அனல் பறக்க, கலைந்த கேசமும், கையில் சாட்டை வைத்து கொண்டு  நின்றவனை பார்த்து சுபியே கொஞ்சம் நடுங்கித்தான் போனாள் .. " அவசரபட்டு இவன்கிட்ட மீசை அழகா இருக்குன்னு சொன்னோம் .. இப்போ  பாரு சிங்கம் சூர்யா ரேஞ்சுக்கு மீசைய வளர்த்துகிட்டு இப்படி முறைச்சு நம்மளையும் மிரட்டுரானே " என்று மனதிற்குள் பேசி  கொண்டாள் சுபத்ரா.. இந்த ரணகலத்துளையும் ஒரு கிளுகிளுப்பா சுபி ??? 

அப்போதுதான் அவள் கவனித்தாள்... அவளை கடத்திய ( ??) இருவருமே அவளை நெருங்க கூட இல்ல .. அவளது கைகளை கூட பிடிக்கவில்லை .. " யாரு டா நீங்கலாம் ? " என்பதுபோல அவள் பார்த்தாள்.....

" வந்துட்டான்யா ...எங்க சிங்கக்குட்டி " என்று அவர்களின் குரல் கேட்க , குரல் கேட்ட திசையில் அவர்களை பார்த்ததும் முகம் மலர்ந்தாள் சுபத்ரா ... அர்ஜுனனோ இன்னும் கோபமாய் விழி விரிய நிற்க

" பார்த்தியாடி என் பேரனின் வீரத்தை? நம்மூரு அய்யனாரு  மாதிரி நிற்கிறான் பாரு " என்று மீசையை முறுக்கி கொண்டு நின்றார் வேலுச்சாமி அய்யா .. !

" போதும்ங்க உங்க பெருமை .. மாப்பிளை எப்படி கோவமா நிற்குறாரு பாருங்க ... " - வள்ளியம்மாள் ...

அர்ஜுனன் என்ன நடக்கிறது ? என்பதுபோல புருவம் உயர்த்தி பார்க்க " தாத்தா பாட்டி , அஜ்ஜு " என்றாள் சுபி ..

சூரியனை கண்ட பனிபோல ஒரே நொடியில் மறைந்துவிட்டது அவனின் கோபம் .. சவுக்கை கீழே போட்டவன், ஸ்டைலாய் குத்தித்து தாத்தா  பாட்டியிடம் ஆசி வாங்கினான் ..

" நல்லா இருய்யா ... அந்த அர்ஜுன் மாதிரியே ராசாவாட்டம் இருய்யா " என்றார்  பாட்டி ..

தாத்தாவோ " சிங்கக்குட்டி மாப்பிளை நீங்க .. எம்பேத்தி நல்ல வீரனைத்தான் கட்டிகிறா " என்று மீசையை நீவிகொண்டார்..

" ஐயோ தாத்தா, எனக்கு ரொம்ப மரியாதையை தந்து தள்ளி வைக்கதிங்க .." என்றான் .. அவனை பெருமையாய் பார்த்தவர் அர்ஜுனனை அணைத்து கொண்டார்... அதற்குள் மொத்த குடும்பமும் அங்கே ஆஜர் ஆனது ...

" அப்பா " என்றபடி சூர்யாவும் சந்துருவும் வர, அவர்களுக்கு முன் கிருஷ்ணாவும் ரகுராமும் " தாத்தா " என்றபடி அவரை அணைத்து கொண்டனர் .. " டேய் எங்க அப்பாடா " என்று சூர்யாவே கொஞ்சம் குரல் உயர்த்திய பின்தான் இருவரும் தயை காட்டி அவரை அருகே வர வழிவிட்டனர் ... அபிராமியோ தனது மாமியாரை கண்டவுடனேயே அழுதுவிட்டார் ..

" நீ ஏன் தாயி கண் கலங்குற? "

" எப்படி  இருக்கீங்க  அத்தை ? "

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.